இணையம் எப்போதும் நமக்கு ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா புதன்கிழமை இரவு மாரடைப்பால் மரணமடைந்தார். உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள கால்பந்து வீரர் மரடோனாவின் மரணம் உலகம் முழுவதையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் மரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தியதால், Maradona என்ற பெயர் சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. ஆனால் அஞ்சலி செலுத்தும்போது மரடோனாவுக்கு மட்டுமல்ல, பாப் பாடலில் கோலோச்சும் பாடகி மடோனாவுக்கும் சில ரசிகர்கள் RIP சொல்லத் தொடங்கிவிட்டனர்.
RIP Madonna, you'll be forever in our hearts. Legend. pic.twitter.com/EnMrIUZhRs
— little icah (poemtoahoe) November 25, 2020
பல ரசிகர்கள் மரடோனாவின் பெயரை மடோனா என்று தவறாகக் கருதி, பாடகிக்கு அஞ்சலி செலுத்தினர். மரடோனாவின் சமூக ஊடக கணக்குகளில் மட்டுமல்ல பாப் ராணி மடோனாவின் சமூக ஊடக கணக்குகளும் அஞ்சலி செய்திகளால் நிரம்பின. குழப்பத்தினால் விளைந்த தவறின் உச்சக்கட்டமாக மடோனா (Madonna) இறந்துவிட்டதாக ட்விட்டரில் (twitter) வதந்தி பரவியது.
MADONNA DID NOT DIE, the former Argentine footballer Diego Armando #Maradona died, he suffered a cardiorespiratory arrest from which he could not be resuscitated despite the medical attention received, reported his agent Matías Morla. #KPM pic.twitter.com/auAhwLVlpl
— Katy Perry Media (katyperrymedia_) November 25, 2020
இறுதியில் நிறைய பேர் இந்த முட்டாள்தனத்தை உணர்ந்து அதைச் சுற்றி நகைச்சுவைகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
madonna logging into twitter to find out she has died pic.twitter.com/MDllPh4oHm
— john (@johnmceneaney) November 25, 2020
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மூளை அறுவை சிகிச்சைக்கு பின்னர் நவம்பர் 11 ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார். யாரோடும் ஒப்பிட முடியாத மரடோனா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். ஆனால், மரடோனா புதன்கிழமையன்று மாரடைப்பால் (massive heart attack) இறந்தார்.
Madonna opening twitter this morning pic.twitter.com/0ADgCUfCFx
— hava nagila (#GangBang Remix) (shantytyrelle) November 25, 2020
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR