டிஸ்னி பிளஸ் ஒரு புதிய சந்தா திட்டத்தை அறிவிக்க உள்ளது, இது மிகவும் விலை குறைவானதாகவும் அதே சமயம் விளம்பரங்களை கொண்டதாகவும் வர உள்ளது. டிஸ்னி பிளஸ் ஸ்ட்ரீமிங் நிறுவனமானது இந்த திட்டத்தை இந்த ஆண்டில் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த திட்டம் முதலில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்படுத்தப்பட்டு, பின்னர் மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தற்போது இந்தியாவில் மாதத்திற்கு ரூ.299 முதல் மூன்று திட்டங்களை வழங்குகிறது.
மேலும் படிக்க | 4 ஜிபி மெமரி கார்டில் 128 ஜிபி சேமிப்பது எப்படி? ஸ்மார்ட்போன் டிரிக்ஸ்
இதுகுறித்து டிஸ்னி மீடியா மற்றும் பொழுதுபோக்கு விநியோகத்தின் தலைவர் கரீம் டேனியல் கூறுகையில், “டிஸ்னி ப்ளஸுக்கான ஆக்ஸஸை குறைந்த விலையில் அதிகமான பார்வையாளர்களுக்கு விரிவுபடுத்துவது நுகர்வோர், விளம்பரதாரர்கள் மற்றும் எங்கள் ஸ்டோரி டெல்லர்கள் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் விளம்பரதாரர்கள் ஏராளமான பார்வையாளர்களை பெற முடியும் என்று கூறியுள்ளார்.
டிஸ்னி பிளஸ் விளம்பரம் இல்லாத வெர்ஷனை குறைவான விலையில் வழங்கப்பட இருக்கிறது. விளம்பரம் இல்லாத வெர்ஷன் தற்போது மாதத்திற்கு $7.99 (தோராயமாக ரூ. 610) வழங்கப்படுகிறது. சமீபத்திய அறிக்கையின்படி டிஸ்னியானது 129.8 மில்லியன் டிஸ்னி பிளஸ் சந்தாதாரர்களைக் கொண்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருக்கு 5.9 மில்லியன் சந்தாதாரர்கள் உள்ளனர். சந்தாதாரர்களுக்கு குறைவான விலையில் சந்தா திட்டங்களை வழங்குவதன் மூலம், டிஸ்னி 2024-ம் ஆண்டிற்குள் 230-260 மில்லியனை தொடுவதை நோக்கமாகக் கொண்டு இருக்கிறது. டிஸ்னி அறிமுகப்படுத்தப்போகும் புதிய சந்தா திட்டம் முதலில் அமெரிக்கா மற்றும் கனடாவில் உள்ள சந்தாதாரர்களுக்கே வழங்கப்பட முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சூப்பர் மற்றும் பிரீமியம் திட்டங்களை வழங்குகிறது. மாதாந்திர பிரீமியதின் விலை ரூ.299க்கும், வருடாந்திர பிரீமியம் திட்டம் ரூ.1499க்கும் கிடைக்கிறது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றொரு சந்தா திட்டத்தை இந்தியாவில் விற்பனை செய்கிறது, இந்த திட்டமானது சூப்பர் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.899 செலுத்தப்படும் இந்த திட்டம் முழு ஹெச்டியை ஆதரிப்பதோடு, 4கே வீடியோவையும் ஆதரிக்கிறது.
டிஸ்னி பிளஸ் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு உட்பட 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் சேவைகளை விரிவுபடுத்த இருப்பதாக அறிவித்தது. டிஸ்னி பிளஸ் தொடங்கப்படும் நாடுகளின் முழுமையான பட்டியலில் அல்பேனியா, அல்ஜீரியா, அன்டோரா, பஹ்ரைன், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பல்கேரியா, குரோஷியா, செக்கியா, எகிப்து, எஸ்டோனியா, கிரீஸ், ஹங்கேரி, ஈராக், இஸ்ரேல், ஜோர்டான், கொசோவோ, குவைத், லாட்வியா, லெபனான், லிபியா, லிச்சென்ஸ்டீன், லிதுவேனியா, மால்டா, மாண்டினீக்ரோ, மொராக்கோ, வடக்கு மாசிடோனியா, ஓமன், பாலஸ்தீனம், போலந்து, கத்தார், ருமேனியா, சான் மரினோ, சவுதி அரேபியா, செர்பியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, தென்னாப்பிரிக்கா, துனிசியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நகரம் மற்றும் யேமன் ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க | குறைவான விலையில் 3 GB டேட்டா+Hotstar கொடுக்கும் ஜியோ..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR