நாய் வளர்க்கலாமா? பூனை வளர்க்கலாமா? எந்த செல்ல பிராணி சிறந்தது?

Dog vs Cat Which Is Better? பலருக்கு செல்லபிராணியை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர், நாய் வளர்க்கலாமா? அல்லது பூனை வளர்க்கலாமா? என்று குழப்பத்தில் இருப்பர். அவர்கள், இங்கு படிக்கவும். 

Written by - Yuvashree | Last Updated : Aug 26, 2024, 03:31 PM IST
  • பூனை vs நாய்
  • எது வளர்ப்பது சிறந்தது?
  • உங்களுக்கான சாய்ஸ்..
நாய் வளர்க்கலாமா? பூனை வளர்க்கலாமா? எந்த செல்ல பிராணி சிறந்தது?  title=

Dog vs Cat Which Is Better? தனியாக இருக்கும் பலருக்கு அல்லது புதிதாக குடும்பத்தை தொடங்கிய பலருக்கு ஒரு செல்லப்பிராணியை வீட்டில் வாங்கி வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். அதிலும் சிலருக்கு நாயை வளர்க்க வேண்டும் என்று சிறுவயதில் இருந்து அசை இருக்கும். ஒரு சிலருக்கு பூனை வளர்க்க வேண்டும் என்று ஆசை இருக்கும். இது இல்லாமல் மூன்றாவதாக ஒரு சிலர் இருப்பர். அவர்களுக்கு இரண்டில் எதை எடுத்து வளர்க்க வேண்டும் என்றே தெரியாது.

நாய் vs பூனை:

நாய்கள், பூனைகள் இரண்டுமே ஐந்தரிவு கொண்ட பிராணிகள்தான். ஆனால் இவை இர்டுக்கும் அதிக அளவிற்கும் வித்தியாசம் இருக்கிறது. நாய்கள், தன்னை வளர்ப்பவர்கள் மீது ஒரு வகையில் பாசம் காட்டினால் அதற்கு பெரும்பாலான பூனைகள் எதிர்மாறாக வேறு வகையில் பாசம் காட்டும். இரண்டை வளர்ப்பவர்களும் வெவ்வேறு மாதிரியான சிக்கல்களையும், பாசத்தையும் அனுபவிக்கின்றனர்.

நாய் வளர்ப்பில் இருக்கும் நன்மைகள்:

>நாய்கள், நம்மை தனிமையில் இருப்பது போல உணர வைக்காது. இவை கொடுக்கும் அளவில்லா பாசத்தால் பலர் தற்கொலை எண்ணங்களில் இருந்து கூட மீண்டிருப்பதாக கூறியிருக்கின்றனர். ஒரு நாயை வளர்ப்பது நமக்குள் இருக்கும் தனிமை உணர்வை நீக்கும்.

>நாய் வளர்ப்பவர்கள், அதனுடன் ஒரு நல்ல பாசமான பந்தத்தை உருவாக்கி கொள்கின்றனர். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் குறைவதாகவும், சீக்கிரம் உயிரிழப்பது தவிர்க்கப்படுவதாகவும் ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

>நாய்கள், பதற்றத்தை குறைக்குமாம். இவை, நமது கவலைகளை நீக்கி மன அழுத்தத்தையும் குறைக்குமாம். இதனால் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோனும் உற்பத்தி ஆகாமல் இருக்குமாம்.

>நாமே சோம்பேறி தனமாக இருக்கும் சமயத்தில் கூட நாய்கள் நம்மை நடக்க தூண்டும். இவற்றிற்காகவே நாம் வெளியில் எழுந்து நடப்போம். இதனால் நம் மனநிலை மேம்படுவதுடன் உடலுக்கும் நன்மை ஏற்படும். 

>நாய் வளர்ப்பவர்கள், பிறரால் அதிகமாக கவனிக்கப்படுவர். உதாரணத்திற்கு நீங்கள் உங்கள் நாயை வாக்கிங் அழைத்து செல்லும் போது உங்களின் செல்ல பிராணியை பார்ப்பதற்கென்றே நான்கு பேர் வழியில் நிற்பர். அவர்கள் ஐந்தறிவு ஜீவனை பார்ப்பதோடு அல்லாமல் உங்களையும் பார்ப்பர். 

>நீங்கள், பிறரிடம் பேச தெரியாத நபராக இருந்தால் நாய்கள் உங்களை சோஷியலாக பேசுவதற்கு பழக்கிவிடும். இதனால் நீங்கள் இன்னும் கொஞ்சம் இறுக்கமற்ற நபராக மாறுவீர்கள். 

மேலும் படிக்க | ’பெட்’ வளர்ப்பவரா நீங்கள்? செல்லப்பிராணி வளர்த்தால் ஆயுசு குறையும்! அதிர்ச்சித் தகவல்

பூனை வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள்:

>பூனைகள் எப்போதும் அமைதியாகவே இருக்கும். சத்தம் பிடிக்காதோர் பூனைகளை தங்கள் செல்ல பிராணிகளாக வளர்க்கலாம்.

>பெரும்பாலான பூனைகள் தங்களை தாங்களே பார்த்துக்கொள்ளும் திறனுடன் இருக்கிறது. இவற்றை அடிக்கடி வாக்கிங் அழைத்து செல்ல வேண்டும் என்ற அவசியமும் இல்லை. ஒரு சில பூனைகளுக்கு பிரத்யேக பராமரிப்பு தேவைப்பட்டாலும், பல சமயங்களில் பூனையின் உரிமையாளர் அதற்கு தேவைப்பட மாட்டார். 

>ஒரு சிலரால் நாய்களை வீட்டிற்குள் வைத்து வளர்க்க முடியாது. மாறாக, அவற்றை வெளியில் கட்டி வைத்திருப்பர். வீட்டிற்குள் நுழைக்க வேண்டும் என்றால் அவற்றிற்கு பிரத்யேக ட்ரெயினிங் கொடுக்க வேண்டும். ஆனால், பூனைகளுக்கு அப்படி கிடையாது. அவை இயற்கையாகவே வீட்டிற்குள் இருக்க பழகி விடும். 

>நாய்களுடன் ஒப்பிடுகையில் பூனைகளை வளர்க்க அவ்வளவு பெரிதாக செலவு ஏற்படாதாம். ஆனால், இது வெவ்வேறு வகை பூனைகளை பொறுத்து மாறுபடும். 

எது சிறந்ததது? 

நாய்-பூனை இரண்டுமே தங்களின் வழியில் சிறந்த முறையில் பாசத்தை காட்டுவதில் ஒன்றை ஒன்று மிஞ்சிவிடும். அளவற்ற பாசம் தேவை என நினைப்பவர், தனிமையுடன் உணர கூடாது என்று நினைப்பவர், ஆபத்து தன்னை நெருங்க கூடாது என்று நினைப்பவர் நாய்களை வளர்க்கலாம். தனக்கு அமைதியான வாழ்க்கையும், சிறு பொருப்புணர்வும் வேண்டும் என்று நினைப்பவர்கள் பூனையை வளர்க்கலாம். 

மேலும் படிக்க | செல்லப்பிராணிகள் தொலைந்துவிட்டால்... இனி Swiggy உங்களுக்கு கண்டுபிடித்து தரும் - அது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News