இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு சீக்கிரம் வரலாம்.. முன்னெச்சரிக்கை அறிகுறிகள்..!

Early heart attack symptoms : மாரடைப்பு வருவதற்கு முன்பு வெளிப்படும் அறிகுறிகள் எல்லாமே வாயு பிடிப்பு போன்ற மற்ற உடல் நல சிக்கல்களுக்கு காட்டும் அறிகுறிகளைப் போன்றே இருப்பதால் தான், சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 27, 2024, 09:49 AM IST
  • மாரடைப்பை உணர்த்தும் அறிகுறிகள்
  • வியர்வை, வலி, சோர்வு இருக்கும்
  • உயிரை காப்பாற்ற நீங்கள் செய்ய வேண்டியது
இந்த அறிகுறிகள் இருந்தால் மாரடைப்பு சீக்கிரம் வரலாம்.. முன்னெச்சரிக்கை அறிகுறிகள்..! title=

heart attack Prevention Tips : ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு காரணமாக நாள் ஒன்றுக்கு 15 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த புள்ளி விவரங்களும் பெரும் அச்சத்தை ஏற்படுத்துபவையாக இருக்கின்றன. மாரடைப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என்னவென்று பார்த்தால், சரியான நேரத்தில் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் போவதே ஆகும். உரிய மருத்துவ உதவிகள் மட்டும் கிடைத்தால் பல உயிரிழப்புகளை தடுக்க முடியும். 

ஹார்ட்அட்டாக் வருதற்கு முன் மிக முக்கியமான அறிகுறி என்றால் இடது பக்க மார்பில் அசௌகரியம் ஏற்படும். அழுத்தம், கடுமையான வலி ஏற்படும். அப்போது இதயத்துக்கு செல்லும் ரத்தம் தடைபடும்போது இந்த அழுத்தம் எல்லாம் ஏற்படுகிறது. இந்த வலி மற்றும் அறிகுறிகள் எல்லாம் சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கிறது என்றால் உடனடியாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள். 

ஹார்ட் அட்டாக் என்றால் நிச்சயம் அந்த வலியானது இடது கை, முதுகு, கழுத்து, தாடை என படிப்படியாக பரவும். குமட்டல் அல்லது லேசான தலைவலி ஏற்படும். இப்படி ஏற்பட்ட உடனே நீங்கள் சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள். நீங்கள் எந்த விதமான கடினமான வேலைகள் அல்லது உடற்பயிற்சி செய்யாதபோது வியர்வைஅதிகளவில் இருந்தால், அதனுடன் மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும் தென்பட்டால் இதுவும் மாரடைப்பு வருவதற்கான அறிகுறியே. 

மேலும் படிக்க | புளித்த தோசை மாவை வைத்து சுவையாக ‘இதை’ செய்யலாம்..முன்னாடியே தெரியாம போச்சே!

மேலும், நன்றாக இருக்கும் நேரத்தில் உங்களுக்குள் திடீரென ஒருவிதமான சோர்வு, பலவீனமான உணர்வு ஏற்பட்டால், அதனைத் தொடர்ந்து மார்பு பக்கம் வலி ஆகியவையும் தென்பட்டால் இதுவும் மாரடைப்புக்கான அறிகுறி தான். அதனால், விழிப்புணர்வோடு செயல்பட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள். அப்போது, அங்கு உங்களுக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு, உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். 

ஹார்ட் அட்டாக் என்பதை சந்தேகித்தால் என்ன செய்ய வேண்டும்?

- மாரடைப்புக்கான அறிகுறிகளை உங்களிடமோ அல்லது வேறு யாரிடமோ நீங்கள் உணர்ந்தால் அல்லது பார்த்தால் உடனே பீதியடைய வேண்டாம்.
- விரைவாக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுவிடுங்கள். ஒருசில அறிகுறிகள் தென்பட்டவுடனே காலம் தாமதிக்க வேண்டாம்
- மாரடைப்பு பிரச்சனைகளுக்கு காரணமான மோசமான வாழ்க்கை முறையில் இருந்துவிடுபடுங்கள். புகைப்பிடித்தல், இரவு கண் விழித்திருந்தல் உடற்பயிற்சி இல்லாமை ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு திரும்பவும்.
- மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், யோகாசனம், தொலைதூர பயணம் ஆகியவை உங்களை புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். 

மேலும் படிக்க | உங்கள் Ex உடன் மீண்டும் காதல் உறவை தொடங்கலாமா? குழப்பமா இருந்தா இதை படிங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News