Upcoming e-Scooters in India: நாட்டில் பல இடங்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ .100 ஐ தாண்டியுள்ளது. காரை கூட விட்டுவிடலாம், ஸ்கூட்டரில் வெளியே செல்லக்கூட நாம் பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், நமக்கு இதற்கு ஒரு சிறந்த மாற்றாய் வரவல்லது மின்சார வாகனங்கள் மட்டுமே.
மின்சார கார்களை பொறுத்தவரை, இந்தியாவில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அதிக கார்கள் இல்லை. அப்படி இருக்கும் கார்களும் விலை அதிகமாகவே உள்ளன.
ஆனால், மின்சார ஸ்கூட்டர்கள் நம் வரம்பில் உள்ளன. இவற்றின் விலையும் அம்சங்களும் சாதாரண மக்களுக்கு ஏற்றதாக உள்ளன. இந்தியாவில் விரைவில் வரவுள்ள மின்சார ஸ்கூட்டர்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்தியாவில் வேகம் பிடித்தன மின்சார இரு சக்கர வாகனங்கள்
இந்தியாவில் மின்சார இரு சக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. Revolt, Ather Energy, Bajaj Auto மற்றும் TVS Motors ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் இந்தியாவில் மின்சார வாகன (Electric Vehicles) மையமாகப் பார்க்கின்றன. மின்சார வாகனக் கொள்கையையும் அரசாங்கம் பல நெகிழவித் தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக உற்பத்தியாளர்களுக்கு மானியங்களும் வழங்கப்படுகின்றன. யமஹா போன்ற நிறுவனங்களும் இப்போது தங்கள் மின்சார ஸ்கூட்டர்களை இந்தியாவுக்கு கொண்டு வர தயாராக இருப்பதற்கு இதுவே காரணம்.
ALSO READ: Electric Scooter-களை அறிமுகம் செய்யவுள்ளன Hero, Honda: 5 மடங்கு செலவு குறையும்!!
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric)விரைவில் தனது மின்சார ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஊடக அறிக்கைகளில் வெளியான செய்திகளின்படி, நிறுவனம் அடுத்த ஜூலை மாதம் ஸ்கூட்டரின் விலையை அறிவிக்கக்கூடும். நிறுவனம் ஏற்கனவே தனது 'ஹைப்பர்சார்ஜர் நெட்வொர்க்கை' இந்திய நகரங்களில் பரப்பத் தொடங்கியுள்ளது. இந்த நெட்வொர்க்கில் இந்தியாவின் 400 நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் புள்ளிகள் இருக்கும்.
ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்லாப் பேட்டரி பயன்படுத்தப்படும். அதாவது பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான இடையூறும் இருக்காது. சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி மட்டுமே மாற்றப்பட்டால் போதும். இதற்கு 5 நிமிடங்கள்தான் ஆகும். இந்த ஸ்கூட்டரின் வரம்பு, ஒரே சார்ஜில் 240 கி.மீ ஆகும்.
Suzuki Burgman எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
Suzuki Motorcycle India தனது மின்சார ஸ்கூட்டரான Burgman Street 125 ஐ விரைவில் அறிமுகப்படுத்தக்கூடும். நிறுவனம் பல மாதங்களாக இந்த மின்சார ஸ்கூட்டரை சோதனை செய்து வருகிறது. சாலை சோதனையின்போதும் இந்த மின்சார ஸ்கூட்டரைக் காண முடிந்தது. அதன் புகைப்படம் பல வாகன வலைத்தளங்களிலும் அச்சிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக அதிக விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.
யமஹா இந்தியாவில் மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்யவுள்ளது
ஊடக அறிக்கைகளில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, யமஹா இந்தியா (Yamaha India) மற்றும் உலக சந்தைக்காக மின்சார ஸ்கூட்டர்களில் வேலை செய்து வருகிறது. E01 e-scooter 2019 Toyota Motor Show-வில் யமாஹா இ-ஸ்கூட்டருக்கான கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியது. அதே ஆண்டில், நிறுவனம் தைவானில் EC-05 electric scooter-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் நீக்கக்கூடிய பேட்டரியுடன் வருகிறது. இதன் அதிகபட்ச வரம்பு மணிக்கு 100 கிலோமீட்டர் ஆகும்.
ஊடக அறிக்கையின்படி, யமஹா தனது முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தவும் தயாராகி வருகிறது. Fascino 125 FI Hybrid மற்றும் Ray ZR Hybrid ஆகியவற்றை அடுத்த ஆண்டுக்குள் நிறுவனம் அறிமுகம் செய்யக்கூடும்.
ALSO READ: ரூ .18,000 வரை மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் Electric Scooters
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR