இபிஎஃப் கணக்கு: சம்பளம் வாங்குபவர்களுக்கு, வருங்கால வைப்பு நிதியின் தொகை அவர்களின் வாழ்நாள் வருமானமாகும். அத்தகைய சூழ்நிலையில், இபிஎஃப்ஓ தொடர்பான விதிகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். ஒருவர் பணியில் இருக்கும் வரை, இபிஎஃப்-ல் பங்களிப்பை அளிக்கிறார். அப்படி செய்யும் பங்களிப்பின் காரணமாக, ஓய்வு பெறும்போது, கணிசமான தொகை சேர்கிறது.
இது முதுமைக்கு ஒரு பாதுகாப்பான ஆதாரமாக இருக்கிறது. ஆனால் பல சமயங்களில் போதுமான தகவல் இல்லாததாலும் சில தவறுகள் காரணமாகவும் ஊழியர்களின் பிஎஃப் கணக்கு கணக்கு மூடப்பட்டுவிடும். ஆகையால், பிஎஃப் உறுப்பினர்கள் இத்தகைய தவறை செய்யக்கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
கணக்கு மூடப்படலாம்
நீங்கள் முன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்து புதிய நிறுவனத்திற்கு உங்கள் பிஎஃப் கணக்கை மாற்றாமல் இருந்து, பழைய நிறுவனம் மூடப்பட்டால், அந்த நிலையில், உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 36 மாதங்களுக்கு எந்தப் பரிவர்த்தனையும் இல்லை என்றால், அதாவது அதில் பணம் போடப்படவில்லை என்றால், உங்கள் பிஎஃப் கணக்கு மூடப்படும். பிஎஃப் அத்தகைய கணக்குகளை 'செயல்படாத' பிரிவில் சேர்க்கிறது.
கணக்கை மீண்டும் புதுப்பிப்பது எப்படி?
கணக்கு 'செயல்படாத' கணக்காக மாறிவிட்டால், நீங்கள் அதில் பரிவர்த்தனை செய்ய முடியாது. கணக்கை மீண்டும் செயல்பட வைக்க, நீங்கள் பிஎஃப்-க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். கணக்கு 'செயல்படாத' நிலைக்கு சென்றாலும், கணக்கில் இருக்கும் பணத்திற்கு வட்டி தொடர்ந்து கிடைக்கிறது.
மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு EPFO-ன் அதிரடி அறிவிப்பு!
அதாவது உங்கள் பணம் வீணாகாமல், நீங்கள் அதை திரும்பப் பெறுவீர்கள். முன்னதாக, இந்தக் கணக்குகளுக்கு வட்டி கிடைத்ததில்லை. ஆனால், 2016ல் விதிகள் திருத்தப்பட்டு இந்த தொகைக்கான வட்டி தொடங்கப்பட்டது. நீங்கள் 58 வயதை அடையும் வரை உங்கள் பிஎஃப் கணக்கில் வட்டி சேரும் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
கணக்கு எப்போது 'செயல்படாத' நிலைக்கு செல்லும்?
புதிய விதிகளின்படி, ஊழியர் இந்த நிலைகளில் இபிஎஃப் இருப்பைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கவில்லை என்றால், இபிஎஃப் கணக்கு 'செயலிழந்து' போகும். அந்த நிலைகள் இவைதான்:
A- ஓய்வுபெற்று 36 மாதங்கள் ஆன பிறகும், உறுப்பினர் 55 வயதை அடையும் போது
B- உறுப்பினர் நிரந்தரமாக வெளிநாட்டில் குடியேறும்போது
சி- உறுப்பினர் இறந்துவிட்டால்
D- உறுப்பினர் முழு ஓய்வூதிய நிதியையும் திரும்பப் பெற்றிருந்தால்
4. 7 ஆண்டுகளாக யாரும் எந்த பிஎஃப் கணக்கையும் கோரவில்லை என்றால், இந்த நிதி மூத்த குடிமக்கள் நல நிதியில் சேர்க்கப்படும்.
இபிஎஃப்ஓ தொடர்பான வழிமுறைகள் என்ன
இபிஎஃப்ஓ தனது சுற்றறிக்கை ஒன்றில், செயலற்ற கணக்குகள் தொடர்பான கிளெயிம்களைத் தீர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. மோசடி தொடர்பான ஆபத்து குறைக்கப்படுவதையும், உரிமை கோருபவர்களுக்கு உரிமைகோரல் செலுத்தப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
செயலற்ற பிஎஃப் கணக்குகளை யார் சான்றளிப்பார்கள்
செயல்படாத பிஎஃப் கணக்குகள் தொடர்பான கோரிக்கையை தீர்க்க, அந்த கோரிக்கையை பணியாளரின் முதலாளி சான்றளிக்க வேண்டியது அவசியம். எவ்வாறாயினும், நிறுவனம் மூடப்பட்டு, உரிமைகோரலைச் சான்றளிக்க யாரும் இல்லை என்றால், KYC ஆவணங்களின் அடிப்படையில் வங்கி அத்தகைய கோரிக்கையை சான்றளிக்கும்.
மேலும் படிக்க | EPF முக்கிய செய்தி: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம், அரசு பரிசீலனை தொடர்கிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR