மன அழுத்தமும் சோர்வும் அதிகரிக்கும் போது, நம் கண்கள் பலவீனமடையத் தொடங்குகின்றன. இந்த காரணங்களால், கண்களுக்குக் கீழ் கருவளையங்கள் (Dark Circles) ஏற்படுகின்றன. கண்களைச் சுற்றியுள்ள தோல் மிகவும் மென்மையானது. இரத்த ஓட்டம் பாதிக்கப்படுதல் அல்லது வறட்சி ஏற்பட்டால் களைஇழந்து காணப்படும். கருவளையங்களை போக்கி கண்களை ஒளிரச் செய்ய தக்காளியைப் பயன்படுத்தலாம்.
கருவளையங்களை அகற்றும் தக்காளி
தக்காளி (Tomato), தோல் ஒளிரச் செய்யும் சிவாப்பாக்கும் ஒரு சிறந்த இயற்கை ப்ளீச்சிங் முகவர். இதில் உள்ள வைட்டமின்-சி, பாக்டீரியா எதிர்ப்பு, மிகவும் நன்மை அளிப்பதோடு, இவை இளைமையாக வைத்திருக்க பெரிதும் உதவுகின்றன. கண்களின் கீழ் இருண்ட வட்டங்களை நீக்குகின்றன. இதில் உள்ள லைகோபீன் சருமத்தை சூரிய ஒளியினால் ஏற்படும் பாதிப்பில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகிறது.கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியங்களை 15 நாட்களுக்கு தவறாமல் செய்தால், நீங்கள் கருவளையத்தில் இருந்து விடுபடுவீர்கள்.
1. கருவளையங்களை அகற்றுதல்: தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு-தக்காளி என்பது அனைவருக்கும் பிடித்த காய்ஜ்கறி தான். அது வீட்டில் நிச்சயம் இருக்கும். தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை உங்கள் கருவளையத்தை போக்கும். ஒரு தக்காளியையும் உருளைக்கிழங்கையும் அரைத்து, கலக்கவும். இந்த இரண்டையும் கலந்து பேஸ்ட் தயார் செய்து, கண்களின் கீழ் இருக்கும் கருவளையங்களில் தடவி அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
ALSO READ | வெல்லத்திற்கு இளமைக்கும் சம்பந்தம் உள்ளதா; நிபுணர்கள் கூறுவது என்ன..!!!
2. கருவளையங்களை அகற்ற தக்காளி மற்றும் எலுமிச்சை
தக்காளியைப் போலவே, எலுமிச்சையும் ப்ளீச்சிங் ஏஜெண்டாக செயல்படும். தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றை நன்கு கலந்து கருவளையங்களில் தடவவும். கண்களுக்குக் கீழே உள்ள பகுதியை கைகளால் லேசாக 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் முகத்தை சாதாரண நீரில் கழுவவும்.
3. கருவளையங்களுக்கான வீட்டு வைத்தியம்: தக்காளி மற்றும் கற்றாழை
தக்காளி சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது. தக்காளி சாறு மற்றும் கற்றாழை ஜெல் கலந்து ஒரு பேஸ்ட் தயார் செய்து கருவளையத்தின் தடவவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
4. தக்காளி, வெள்ளரி மற்றும் புதினா
முதலில், சில புதினா இலைகள், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவைற்றை அரைத்து பேஸ்ட் செய்யவும். இந்த பேஸ்டை கண்களுக்குக் கீழே தடவி 20 நிமிடங்கள் உலர விடவும். அதன் பிறகு முகத்தை சாதாரண நீரில் கழுவ வேண்டும்.
குறிப்பு- சருமத்தில் எதையும் பயன்படுத்துவதற்கு முன், சிறிய அளவில் பயன்படுத்தி பரிசோதனை செய்யவும்.
இங்கே வழங்கப்பட்ட தகவல்கள் எந்தவொரு மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றானது இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | என்ன செய்தாலும் வெயிட் குறையலையா; பப்பாளி காய் ஒன்றே போதும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR