PM Janman | பிரதமர் ஜன்மன் யோஜனா திட்டத்தின் பலன்களை பெற ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது?

PM Janman Yojana Latest Updates: பழங்குடியின சமூகத்தில் அனைவரும் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் ஜன்மன் யோஜனா திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 24, 2024, 08:41 AM IST
PM Janman | பிரதமர் ஜன்மன் யோஜனா திட்டத்தின் பலன்களை பெற ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது? title=

Tribal Communities Development Scheme: பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி ஜன்மன் யோஜனா என்பது பழங்குடியின சமூகங்களின், குறிப்பாக மிகவும் பின்தங்கிய பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்த அனைவரின் ஒட்டுமொத்த வளர்ச்சியை இலக்காகக் கொண்ட ஒரு முக்கிய திட்டமாகும். வாருங்கள் "பிரதம மந்திரி ஜன்மன் யோஜனா ஆன்லைன் பதிவு, செயல்முறை மற்றும் அது தொடர்பான அனைத்து தகவல்களையும்" நீங்கள் அறிந்துக்கொள்ளுங்கள். இந்த திட்டத்தின் பலன்களை உங்களுக்கு தெரிந்த பழங்குடியின சமூக மக்களிடம் தெரியப்படுத்துங்கள்.

பிரதமர் ஜன்மன் யோஜனா என்றால் என்ன?

பிரதமர் ஜன்மன் யோஜனா (பிரதான் மந்திரி ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான்) பொருளாதாரம், சமூகம் மற்றும் கல்வித் துறைகளில் பழங்குடியின சமூக மக்களுக்கு அதிகாரம் அளிக்க தொடங்கப்பட்டது. பழங்குடியினருக்கு அவர்களின் உரிமைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்காக அரசு ரூ.24,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது ஜார்க்கண்டில் உள்ள குந்தி மாவட்டத்தில் பிர்சா முண்டாவின் பிறந்தநாளின் போது தொடங்கப்பட்டது.

பிரதமர் ஜன்மன் யோஜனாவின் முக்கிய நன்மைகள்

புதிய வீடுகள்: இத்திட்டத்தின் கீழ், பழைய வீடுகளுக்குப் பதிலாக புதிய மற்றும் பாதுகாப்பான வீடுகள் கட்டித்தரப்படும்.
சுத்தமான குடிநீர்: ஒவ்வொரு வீட்டிற்கும் சுத்தமான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்.
மின்சாரம் மற்றும் சோலார் சிஸ்டம்: ஆஃப்-கிரிட் சோலார் சிஸ்டம் மற்றும் சோலார் தெருவிளக்குகள் நிறுவப்படும்.
சுகாதார வசதிகள்: பழங்குடி குடிமக்கள் இலவச சுகாதார சேவைகளைப் பெறுவார்கள்.
மலிவு விலை ரேஷன் வசதி: உணவு தானியங்கள் நியாயமான விலையில் கிடைக்கும்.
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: குழந்தைகளுக்கு தரமான கல்வியும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்படும்.

பிரதமர் ஜன்மன் யோஜனா ஆன்லைன் பதிவுக்குத் தேவையான ஆவணங்கள்

1. ஆதார் அட்டை
2. சாதிச் சான்றிதழ்
3. குடியிருப்பு சான்றிதழ்
4. வங்கி கணக்கு விவரங்கள்
5. ரேஷன் கார்டு
6. பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
7. மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி

பிரதமர் ஜன்மன் யோஜனா நன்மையை பெற ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

பிரதமர் ஜன்மன் யோஜனாவின் பலன்களைப் பெற, நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழிமுறைகளைப் பின்பற்றி பதிவு செய்துக்கொள்ளுங்கள்.

1. அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்
2. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://adiprasaran.tribal.gov.in/pm-janman/ க்குச் செல்லவும்.
3. முகப்புப் பக்கத்தில் இருக்கும் "பிரதமர் ஜன்மன் யோஜனா 2024" என்பதை கிளிக் செய்யவும்
4. "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதைத் தேர்வு செய்ய்வும்.
5. அந்த இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, "ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்" என்பதை தேர்ந்தெடுக்கவும்.
6. அடுத்து ஒரு விண்ணப்பப் படிவம் காண்பிக்கப்படும்.
7. அந்த விண்ணப்பப் படிவத்தில் உங்கள் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் பிற தகவல்களை கவனமாக நிரப்பவும்.
8. விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
9. ஒருமுறை அனைத்து விவரங்களையும் சரிப்பார்த்த பிறகு, "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
10. இறுதியாக விண்ணப்ப எண் காட்டப்படும். அதை பாதுகாப்பாக வைத்திருங்கள். அதேபோல விண்ணப்ப படிவத்தைச் சேமித்து, அதை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - மத்திய அரசு தரும் ரூ.82,000 ஸ்காலர்ஷிப் - பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெறுவது எப்படி?

மேலும் படிக்க - போஸ்ட் ஆபீஸ் மூலம் ரூ.9,250 மாத வருமானம் பெறுவது எப்படி?

மேலும் படிக்க - இரவில் சாக்ஸ் போட்டு தூங்குவதால்... நன்மைகள் என்ன? பிரச்னைகள் என்ன? - இதை படிங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News