ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: மத்திய அரசு எடுத்த பெரிய முடிவு

Pension Update: ஓய்வூதியம் பெறும் தேதி குறித்து அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 22, 2023, 09:29 AM IST
  • மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் வழங்கப்படும்.
  • இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • 58 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் கிடைக்கும்.
ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் செய்தி: மத்திய அரசு எடுத்த பெரிய முடிவு title=

ஓய்வூதிய செய்தி புதுப்பிப்பு: நாட்டின் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்காக மத்திய அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. நீங்களும் ஓய்வூதியம் பெறும் நபராக இருந்தால், உங்களுக்கு மற்றொரு நல்ல செய்தி வந்துள்ளது. ஓய்வூதியம் பெறும் தேதி குறித்து அரசு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. இபிஎஃப்ஓ சார்பாக ஒரு சுற்றறிக்கை வெளியிடபட்டு ஓய்வூதிய தேதி பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இனி எந்த நாளில் ஓய்வூதியம் கிடைக்கும் என்பதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் வழங்கப்படும்

ஓய்வூதியதாரர்களுக்கு மாதத்தின் கடைசி வேலை நாளில் ஓய்வூதியம் வழங்கப்படும் என இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது இனி, இபிஎஸ் வசதியைப் பெறுபவர்கள் ஓய்வூதியத்திற்காக ஒரு மாதத்தில் ஒரு நாள் கூட காத்திருக்க வேண்டியதில்லை.

இந்த தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது

ஊடகங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, ஓய்வூதியப் பிரிவு மீளாய்வு செய்யப்பட்டுள்ளது. இதனுடன், அனைத்து கள அதிகாரிகளும் மாதாந்திர பிஆர்எஸ் -ஐ ஓய்வூதியத் துறைக்கு அனுப்பலாம் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதில், அனைத்து ஓய்வூதியர்களின் கணக்கிலும் உரிய நேரத்தில் பணம் சேர வேண்டும் என கூறப்பட்டது. இதனுடன், அனைத்து உத்தரவுகளையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | Indian Railways ஜாக்பாட் செய்தி: ரயிலில் பயணிகளுக்கு இலவச உணவு, மக்கள் ஹேப்பி

58 வயதுக்கு பிறகு ஓய்வூதியம் கிடைக்கும்

எந்தவொரு பணியாளரும் 58 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தின் பலனைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு, பணியாளர்கள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனுடன், இபிஎஃப் -க்கு பங்களிக்கும் ஊழியர்களும் இபிஎஸ் -க்கு தகுதியானவர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

ஓய்வூதியதாரர்கள் கடந்த காலங்களில் பல புகார்களை அளித்துள்ளனர்

சமீப காலமாக, ஓய்வூதியர்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. ஓய்வூதியத்திற்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக இந்த புகார்களில் கூறப்பட்டுள்ளன. இதற்காக, ஓய்வூதியத் தேதியை நிர்ணயிக்க, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது.

இபிஎப்ஓ எடுத்த இந்த முடிவுக்கு பிறகு, ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி அலை ஏற்பட்டுள்ளது. இப்போது ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. மாதத்தின் கடைசித் தேதியில் ஓய்வூதியத் தொகை அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்கிற்கும் மாற்றப்படும். ஓய்வூதியத் தொகை மாதத்தின் கடைசி வேலை நாளில் மாற்றப்படும். முன்னதாக, பல நேரங்களில் ஓய்வூதியம் பெறுவோர் விடுப்பு அல்லது பல காரணங்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

மேலும் படிக்க | இந்த திட்டத்தின் மூலம் ரூ. 50 ஆயிரம் கிடைக்கும்... மாநில அரசின் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News