வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் அல்லது எல்ஐசி என மக்கள் பல இடங்களில் முதலீடு செய்கிறார்கள், அதிலும் குறிப்பாக எல்ஐசி-ல் முதலீடு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மாதந்தோறும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அவர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் அவர்களது எதிர்கால நிதி தேவைக்காக வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைக்கின்றனர், ஓய்வூதியம் கிடைக்கும் அரசு ஊழியர்களுக்கு அதுபற்றிய கவலை இருக்காது, ஆனால் ஓய்வூதியம் இல்லாத தனியார் ஊழியர்களுக்கு அது சற்று கடினமானதாக இருக்கும். இந்நிலையில் அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கும் வகையில் எல்ஐசி ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
எல்ஐசி ஜீவன் சாரல் எனப்படும் இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்துதலில் இருந்து தொகையைத் தேர்ந்தெடுக்கும் ஆப்ஷன் முதலீட்டாளருக்கு உள்ளது. இந்த திட்டத்தில் பங்களிக்க குறைந்தபட்சம் 40 வயது முதல் 80 வயது வரை இருக்க வேண்டும், இது ஒரு வருடாந்திர திட்டமாகும், இதில் முதலீட்டாளர் ஒரே நேரத்தில் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை எல்ஐசியின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.licindia.in மூலம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டு வகைகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
எல்ஐசி சரல் ஜீவன் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ஓய்வூதியமாக ரூ.12,000 பெறலாம் மற்றும் ஒரு முறை பிரீமியம் செலுத்த வேண்டும். இதில் பாலிசிதாரர் மாதாந்திர, அரையாண்டு, காலாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை என்ற விருப்பங்களை தேர்ந்தெடுக்கலாம். இந்த திட்டத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் அவருக்கு ஆண்டுக்கு ரூ.52,500 ஓய்வூதியம் கிடைக்கும். இந்த திட்டத்தில் பாலிசி வாங்குபவர் மருத்துவ பரிசோதனை செய்த விவரங்கள், முகவரி சான்று மற்றும் கேஒய்சி போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும்.
மேலும் படிக்க | மின் கட்டண எண்ணுடன் ஆதாரை இணைத்தால் மானியமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ