பான்-ஆதார் இணைப்பு: பான்-ஆதார் இணைப்புக்கான கடைசி தேதிக்கான கவுன்ட் டவுன் துவங்கிவிட்டது. இதன் காலக்கெடு நெருங்கி வருகிறது. மார்ச் 31, 2023க்குள் ஒருவர் தனது ஆதார்-பான் எண்ணை இணைக்கவில்லை என்றால், அவருடைய பான் கார்டு செயலிழந்துவிடும். அதாவது அவர் தனது பான் கார்டை பயன்படுத்த முடியாது. மேலும் கடந்த ஆண்டு முதல் பான் மற்றும் ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்து வருவதால், அதற்கான அபராதத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். இரண்டையும் இணைத்து விட்டால், உங்கள் பான் கார்டு செயலிழக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.
முடங்கிய பான் கார்டைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
ஒரு வேளை ஒரு நபர் தனது பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். இணைக்காமல், அந்த நபர் தனது பான் கார்டைப் பயன்படுத்த முயற்சித்தால், அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்படும். இதற்கு ரூ. 1,000 முதல் ரூ, 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் அப்படி பயன்படுத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஆகையால், 31 மார்ச் 2023 என்ற தேதியை நினைவில் கொண்டு, இந்த பணியை இன்னும் நீங்கள் செய்யவில்லை என்றால், கண்டிப்பாக செய்து முடிக்கவும்.
மேலும் படிக்க | March 31-க்குள் இந்த பணிகளை செய்துமுடிக்க வேண்டும்: இல்லையென்றால் சிக்கல்தான்
ஆன்லைனில் பான்-ஆதார் இணைப்பது எப்படி?
நல்ல விஷயம் என்னவென்றால், நீங்கள் ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கலாம். இதற்காக, முழுமையான செயல்முறையை இங்கே காணலாம்:
- வருமான வரியின் இ-ஃபைலிங் போர்ட்டலான https://incometaxindiaefiling.gov.in/ -ஐத் திறக்கவும்.
- ஏற்கனவே பதிவு செய்யவில்லை என்றால் பதிவு செய்யவும். உங்கள் பான் எண் (நிரந்தர கணக்கு எண்) உங்கள் பயனர் ஐடியாக இருக்கும்.
- இப்போது உங்கள் பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
- ஒரு பாப் அப் விண்டோ தோன்றும், அதில் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி கேட்கப்படும். அப்படி வரவில்லை என்றால் 'Profile Settings' சென்று 'Link Aadhaar' என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது PAN இல் உள்ளிடப்பட்ட பிறந்த தேதி மற்றும் பாலினம் விவரங்கள் இங்கே தெரியும்.
- இப்போது இந்த விவரங்களை உங்கள் ஆதார் விவரங்களுடன் பொருத்தவும். இந்த விவரம் இரண்டு ஆவணங்களிலும் பொருந்தவில்லை என்றால், நீங்கள் தவறாக உள்ளதைத் திருத்த வேண்டும்.
- விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, “link now” பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- ஒரு பாப்-அப் செய்தி தோன்றும். இது உங்கள் பான் கார் ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவிக்கும்.
- உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்க https://www.utiitsl.com/ அல்லது https://www.egov-nsdl.co.in/ -க்கு செல்லவும்.
நீங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவும் பான்-ஆதார் இணைப்பைச் செய்யலாம்
உங்கள் மொபைலில் UIDPAN என டைப் செய்யவும். 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும். பின்னர் 10 இலக்க பான் எண்ணை எழுதவும். இப்போது செய்தியை 567678 அல்லது 56161 க்கு அனுப்பவும். ஆன்லைனில் பான்-ஆதார் இணைப்பதில் சிக்கல் இருந்தால், அதை NSDL மற்றும் UTITSL இன் PAN சேவை மையத்திலிருந்தும் ஆஃப்லைனில் செய்யலாம்.
ஆதாருடன் பான் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது நினைவில் இல்லை என்றால் எப்படிச் சரிபார்ப்பது?
ஆதார் பான் இணைப்பு ஆகி விட்டதா என்பது உங்களுக்கு நினைவில் இல்லை என்றால், உங்கள் பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதையு இப்படி தெரிந்து கொள்ளலாம்.
- 567678 அல்லது 56161 இல், UIDPAN < 12 இலக்க ஆதார் எண்> < 10 இலக்க நிரந்தர கணக்கு எண்> என்ற இந்த வடிவத்தில் ஒரு செய்தியை அனுப்பி இதை கண்டறியலாம்.
ஆன்லைன் இணைய போர்ட்டலில் ஸ்டேடசை எவ்வாறு சரிபார்ப்பது?
- https://uidai.gov.in/ என்ற UIDAI இணையதளத்திற்குச் செல்லவும் .
- "Aadhaar Services" மெனுவிலிருந்து "Aadhaar Linking Status" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இப்போது உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட்டு "Get Status" பொத்தானைக் கிளிக் செய்யவும்.
- இங்கே நீங்கள் உங்கள் பான் கார்டு எண்ணையும், கேப்ட்சா குறியீட்டையும் உள்ளிட வேண்டும்.
- உங்கள் பான்-ஆதார் இணைப்பின் நிலையைச் சரிபார்க்க "Get Linking Status" என்பதைக் கிளிக் செய்யவும்.
- அதன் பிறகு, உங்கள் ஆதார் பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை நீங்கள் திரையில் பார்க்கலாம்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு தொகையை EMI ஆக மாற்றுவதால் யாருக்கு லாபம்? தெரிந்து கொள்ளுங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ