இவங்கல்லாம் ஜிம்மிற்கு போகவே கூடாது!! மீறி போனா ஆபத்து…

People With These Health Conditions Should Not Go To Gym : ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வது நல்ல விஷயம்தான் என்றாலும், ஒரு சிலர் ஜிம்மிற்கு சென்றாலே ஆபத்துதான். அவர்கள் யார் யார் தெரியுமா? 

Written by - Yuvashree | Last Updated : Jan 18, 2025, 03:58 PM IST
  • யாரெல்லாம் ஜிம்மிற்கு செல்லக்கூடாது?
  • யாரெல்லாம் ஜிம்மிற்கு போகலாம்?
  • டிப்ஸ் இதோ..
இவங்கல்லாம் ஜிம்மிற்கு போகவே கூடாது!! மீறி போனா ஆபத்து… title=

People With These Health Conditions Should Not Go To Gym : ஜிம்மிற்கு சென்று உடல் எடையை குறைப்பது நல்லது தான் என்றாலும், ஒரு சிலர்,ஜிம் பக்கமே திரும்பி பார்க்க கூடாதாம். அவர்கள் யார் தெரியுமா?

நோய்வாய் பட்டவர்கள்: 

இருதய நோய்: இருதயக் கோளாறு உள்ளவர்கள் செல்லக்கூடாது. குறிப்பாக சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், இதயம் பலவீனமானவர்கள் ஜிம்மில் அதிகப்படியான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

சுவாசக் கோளாறு உள்ளவர்கள்: ஆஸ்துமா உன்கிட்ட சுவாசக் கோளாறு உள்ளவர்கள் ஜிம்மிற்கு செல்லக்கூடாதாம். அப்படியே சென்றாலும் அதிகப்படியான உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்ளக்கூடாது என்கின்றனர் மருத்துவர்கள்.

பரவும் நோய் உள்ளவர்கள்: கோவிட் உள்ளிட்ட சில பரவும் நோய் கொண்டவர்கள் ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இவர்களுக்கு பிறரிடம் இருந்து தொற்று ஏற்பட்டால் அது தீவிரமாக மாறிவிடும். இவர்களால் பிறரும் நோய்வாய்ப்பட வாய்ப்புள்ளது.

அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள்: 

எலும்பு உடைந்திருப்பவர்கள், சமீபத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்கள் ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும். இவர்கள், உடல் சீராக ஆரோக்கியமான பின்பு மருத்துவரின் ஆலோசனை பிறகு ஜிம்மிற்கு செல்ல வேண்டும். 

கர்ப்பமாக இருப்பவர்கள்: 

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் பலர் உடற்பயிற்சி செய்வது பார்த்திருப்போம். ஆனால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஒருவர் கர்ப்ப காலத்தில் ஜிம்மில் அதிக உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. இவர்கள் இந்த நேரத்தில் வெயிட் தூக்குவதை தவிர்க்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மனநல கோளாறு உள்ளவர்கள்:

பதற்றம், மன அழுத்தம் உள்ளிட்ட சில மனநல பிரச்சனைகள் இருப்பவர்கள் ஜிம்மிற்கு செல்லும் போது ஆரோக்கியமற்ற பழக்கங்களை உருவாக்கிக் கொள்ளலாம். எனவே ஜிம்மிற்கு செல்வதற்கு முன்னர் இவர்கள் மருத்துவரை அணுகி அவர்கள் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

16 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்:

16 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் அல்லது சிறுமிகள் பெரியவர்களின் ட்ரெயினிங் இல்லாமல் ஜிம்மிற்கு செல்லக்கூடாது. அதேபோல அதிகமாக பயிற்சிகளை மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களும் சரியான ஓய்வு எடுக்காமல் ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

போதைக்கு அடிமையானவர்கள்:

குடிக்கு அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமையாக இருப்பவர்கள் ஜிம்முக்கு செல்லக்கூடாது. அதேபோல சில ஹெவியான மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களும் தகுந்த அணுகுமுறை இல்லாமல் ஜிம்மிற்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

யாரெல்லாம் கண்டிப்பாக ஜிம்முக்கு போக வேண்டும்?

வேலை பார்க்கும் இடத்தில் அல்லது வீட்டில் சும்மாவே அமர்ந்திருப்பவர் ஜிம்மிற்கு செல்லலாம். இது, சோம்பேறித்தனமான பழக்கங்களை வெளியேற்றி, நல்ல பழக்கங்களை வரவைக்கும்.

அதிக எடையுடன் இருக்கும் சிலர் ஜிம்மிற்கு செல்லலாம். இவர்களுக்கு கொழுப்பை குறைத்து தசையை வலுவாக்க ஜிம் உடற்பயிற்சிகள் உதவும்.

தங்களின் உடல் நலனில் அக்கறை கொண்ட வயது வந்தோர் ஜிம்மிற்கு செல்லலாம். 40 வயதுக்கு மேல் தொப்பை போட்ட ஆண்கள் உடல் எடை குறைக்க வேண்டும் என்றாலும், குழந்தை பிறப்பிற்கு பின் ஏறிய உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பினாலும் அவர்கள் ஜின்னுக்கு செல்லலாம்.

இவர்களை தவிர உடல் மற்றும் மன நலனின் அக்கறை கொண்டவர்கள், ஏதேனும் ஒரு விளையாட்டு போட்டிக்காக தங்களை தயார் படுத்திக் கொள்பவர்கள் என பலரும் ஜிம்மிற்கு செல்லலாம். 

மேலும் படிக்க | ஜிம்மிற்கு போகும் முன் சாப்பிடக்கூடாத 5 உணவுகள்...

மேலும் படிக்க | ஜிம், டயட் எதுவும் வேண்டாம்: ஈசியா உடல் எடை குறைக்க சூப்பர் டிப்ஸ் இதோ

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியம் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இந்த தகவல்களை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிப்படுத்தவில்லை.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News