PMJAY Scheme News | தன்வந்திரி ஜெயந்தியை முன்னிட்டு ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஆண்டு தோறும் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ செலவுகளுக்கான காப்பீடு இந்த திட்டத்தின் மூலம் முதியோர் பெற்றுக் கொள்ள முடியும். அதற்காக அவர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தால் AB PM-JAY கார்டு கொடுக்கப்படும்.
நாடு முழுவதும் முதியோர் மருத்துவ சிகிச்சை பெறுவது மிகப்பெரிய சிக்கலாக இருக்கிறது. அவர்களுக்கு மருத்துவ செலவுகளுக்கு போதிய பணம் இல்லாத சூழலும் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்ட மத்திய அரசு மூத்த குடிமக்களுக்கான ஆயுஷ்மான் பாரத் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்தது. இப்போது அந்த திட்டம் 70 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து குடிமக்களும் பெற்றுக் கொள்ளலாம். எந்தவித பொருளாதார அளவுகோலும் இந்த திட்டத்துக்கு இல்லை. ரேஷன் கார்டு, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்கள் இருந்தால் போதும். இந்த திட்டத்துக்கு விண்ணப்பித்து ஆயுஷ்மான் பார்த் கார்டு பெற்று மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | தீபாவளி இனிப்பு, காரம் தரமில்லையா? இப்போதே இந்த நம்பருக்கு புகார் அனுப்புங்கள்!
பிற மருத்துவ காப்பீடு
மத்திய அரசின் சுகாதாரத் திட்டம் (CGHS), முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு நலத் திட்டம் (ECHS), ஆயுஷ்மான் மத்திய ஆயுதக் காவல் படை (CAPF) போன்ற பிற பொது சுகாதாரக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் PMJAY மூலம் பலன் பெற முடியாது. ஏதேனும் ஒரு திட்டத்தில் மட்டுமே அவர்களுக்கான மருத்துவ காப்பீடு கிடைக்கும்.
ஆயுஷ்மான் பாரத் பயனாளிகள்
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைத்து பயனாளிகளும் தங்கள் குடும்பங்களில் இருக்கும் மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இலவச மருத்து காப்பீடு பெற்றுக் கொள்ளலாம். அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும். ஆதார் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். ஏற்கனவே நோய் இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும். ஒரு குடும்பத்தில் இரண்டு பேர் இருக்கும்பட்சத்தில் இருவரும் சேர்ந்து 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?
- PMJAY இணையதளமான https://ayushmanup.in/ இணையதளத்துக்கு செல்லவும். SETU ஆப்சனில் Register Yourself என்பதைக் கிளிக் செய்யவும்.
- இப்போது NHA'aSetu என்ற புதிய போர்ட்டல் ஓபன் ஆகும்
- விண்ணப்பதாரர் நீங்களே பதிவு செய்து கொள்ளும் ஆப்சனை கிளிக் செய்யுங்கள்.
- அங்கு கேட்கும் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்யுங்கள்
- பின்னர் சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்தவுடன் விண்ணப்பம் பதிவு செய்யப்படும்
- விண்ணப்பதாரரின் KYC அதிகாரியால் ஒப்புதல் அளிக்கப்பட்டதும் ஆயுஷ்மான் பாரத் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- கார்டு வந்ததும் ஆயுஷ்மான் இணையளத்துக்கு சென்று 'Download Ayushman Card' ஆப்சனை கிளிக் செய்யவும்
- மாநிலத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு OTP மூலம் சரிபார்க்கவும். இதனை முடித்தவுடன் கார்டு டவுன்லோடு செய்யலாம்.
மேலும் படிக்க | கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்ட் வரை: நவ.1 அன்று வர இருக்கும் மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ