10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால் கட்டணம் எவ்வளவு தெரியுமா? போஸ்ட் ஆபிஸ் வங்கியின் விதிகள் ஜனவரி 1ம் தேதி முதல் மாறவுள்ளன.
அஞ்சலக வங்கியில் (INDIA POST PAYMENTS BANK) பணத்தை எடுப்பதது மற்றும் டெபாசிட் செய்வது தொடர்பான விதிமுறைகள் ஜனவரி 1 முதல் மாறுகிறது. இதற்காக வங்கி தனது வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கும். அதாவது, இனி வாடிக்கையாளர்கள் 10 ஆயிரம் ரூபாய் எடுக்கவும், டெபாசிட் செய்யவும் கட்டணம் செலுத்த வேண்டும்.
INDIA POST PAYMENTS BANK Rules: இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி (India Post Payment Bank (IPPB)) தனது வாடிக்கையாளர்களுக்கான விதிகளை மாற்றியுள்ளது. அதிகபட்ச வரம்பு முடிந்த பிறகு பணத்தை எடுக்கவும் டெபாசிட் செய்யவும் கட்டணம் வசூலிக்கப்படும்.
வங்கியின் கூற்றுப்படி, அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஒவ்வொரு மாதமும் 4 முறை கட்டணம் செலுத்தாமல் பணம் எடுக்கலாம். ஆனால் இதற்குப் பிறகு, பணம் எடுக்கும்போதெல்லாம், வாடிக்கையாளர்கள் 0.50 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணம் 25 ரூபாயாக இருக்கும். சேமிப்பு வங்கிக் கணக்கில் (SAVINGS ACCOUNT) பணத்தை டெபாசிட் செய்வதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது.
Also Read | தபால் அலுலவலகத்தின் சூப்பர் ஹிட் திட்டம்: சிறிய சேமிப்பு, பெரிய லாபம்
25 ஆயிரம் வரை திரும்பப் பெறுவதற்கு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. அடிப்படை சேமிப்புக் கணக்கு தவிர, மற்ற சேமிப்புக் கணக்குகள் மற்றும் நடப்புக் கணக்குகளில் ரூ.10,000 வரையிலான டெபாசிட்களுக்கு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
ஆனால் வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரத்திற்கு மேல் எடுத்தால், 0.50% கட்டணம் செலுத்த வேண்டும், அதாவது ஒரு பரிவர்த்தனைக்கு குறைந்தபட்ச கட்டணம் 25 ஆக இருக்கும். சேமிப்பு மற்றும் நடப்புக் கணக்குகளில் மாதம் ரூ.25,000 வரை பணம் திரும்பப் பெறுவது இலவசம், அதன் பிறகு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 0.50% வசூலிக்கப்படும்.
ஏடிஎம்மில் (ATM) பணம் எடுக்க 21 ரூபாய் வசூலிக்கப்படும்
இலவச பரிவர்த்தனைக்குப் பிறகு பணம் எடுப்பதற்கான கட்டணத்தை அதிகரிக்க இதுவரை ஒப்புதல் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, வங்கி பரிவர்த்தனைக்கு 20 ரூபாய் வசூலிக்கிறது, இதற்கு வரி இல்லை.
பரிமாற்றக் கட்டணத்தை ஈடுகட்டுவதற்காக, இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை அதிகரிக்க முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் (Reserve Bank of India) கூற்றுப்படி, இலவச பரிவர்த்தனைக்குப் பிறகு, வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு பரிவர்த்தனைக்கு 20 ரூபாய்க்கு பதிலாக 21 ரூபாய் வசூலிக்க முடியும். இதில் வரிகள் சேர்க்கப்படவில்லை. இந்த விதி ஜனவரி 1, 2022 முதல் வங்கியால் செயல்படுத்தப்படும். ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டணம் சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Post Office சூப்பர் திட்டம், ரூ10,000 வீதம் முதலீடு; ரூ16 லட்சம் ரிட்டன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR