எச்சரிக்கை! COVID-19 பெருந்தொற்றினால் நஞ்சுக்கொடி சேதமடையும் அபாயம்...

கருவில் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் இடையிலான ரத்த ஓட்டத்தை COVID-19 பாதிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது… 

Last Updated : May 28, 2020, 11:20 PM IST
எச்சரிக்கை! COVID-19 பெருந்தொற்றினால் நஞ்சுக்கொடி சேதமடையும் அபாயம்...   title=

கருவில் உள்ள குழந்தைக்கும், தாய்க்கும் இடையிலான ரத்த ஓட்டத்தை COVID-19 பாதிப்பதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது… 

COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட கர்பிணிகளின் பாதுகாப்புக்காக பல கூற்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன… இதுவரை வெளியான தகவல்களின் படி சொற்ப அளவிலான கர்ப்பிணிகளுக்கே கொரோனா பெருந்தொற்று பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது…..

நார்த்வெஸ்டர்ன் மெடிசின் (Northwestern Medicine) என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திய புதி ஆய்வின்படி, கொரொனா நொய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட கருவுற்ற பெண்களின் நஞ்சுக்கொடியை பாதிக்கக்கூடும்.   கர்ப்பமாக இருக்கும்போது COVID-19தொற்றால் பாதிக்கப்பட்ட 16 பெண்களின் நஞ்சுக்கொடியில் சேதம் ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. 

நஞ்சுக்கொடியில் ஏற்படும் சேதத்தினால், தாயிடம் இருந்து கருவில் உள்ள சிசுவுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.  ஆரம்பக்கட்டத்திலேயே இத்தகைய சிக்கல் இருப்பது கண்டறியப்பட்டால் கருவுற்ற பெண்களை எவ்வாறு மருத்துவ ரீதியாக கண்காணிக்கலாம் என்று கணிக்க உதவும்.  அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் பேத்தாலஜி சஞ்சிகை இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது.

  • அசாதாரண அறிகுறிகள்...

இந்த அறிக்கையின்படி, கொரொனா தொற்று பாதித்த கருவுற்ற பெண்களின் நஞ்சுக்கொடியில் இருவிதமான அசாதாரண பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன.   முதலாவதாக, தாய்க்கும், சிசுவுக்கும் இடையில் போதுமான ரத்த ஓட்டம் இருப்பதில்லை… இதை நஞ்சுக்கொடியின் வேர்த்திசுவில் ஏற்படும் தடை அதாவது வாஸ்குலர் மால்பர்ஃபியூஷன் (vascular malperfusion (MVM)) என்று கூறப்படுகிறது…. இரண்டாவதாக , நஞ்சுக்கொடியில் ரத்தம் உறைந்துப் போவது.  இதை ஆங்கிலத்தில் “இண்டர்விலோஸ் த்ரோம்பி” (intervillous thrombi) என  குறிப்பிடுகின்றனர். MVM இன் சாதாரண நிகழ்வுகளில், தாய்க்கு இயல்பை விட ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும். இதை, ப்ரீக்ளாம்ப்சியா (preeclampsia) என்கிறோம். இது உயர் ரத்த அழுத்தம் உள்ள பெண்களுக்கு ஏற்படுகிறது.  தற்போதைய ஆய்வில் 15 கொரோனா நோயாளிகளில் ஒருவருக்கு மட்டுமே ப்ரீக்ளாம்ப்சியா ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது…..

COVID-19 நோயாளிகளுக்கு ரத்தம் உறைதல் மற்றும் ரத்த நாளங்கள் சிதைவு போன்ற சிக்கல்கள் இருப்பதாக ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்…. கொரோனா தொற்றினால் கர்பிணியிளின்  நஞ்சுக்கொடியில் ரத்தம் உறைந்துப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக  ஆராய்சியாலர்கள் சந்தேகிக்கின்றனர்…

  • கர்ப்பிணிப் பெண்களை கவனமாக கண்காணிப்பது அவசியம்...

நார்த்வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி ஃபைன்பெர்க் ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, “இந்த குழந்தைகளில் பெரும்பாலான குழந்தைகள் இயல்பான கருத்தரிப்பு மூலமாகவே பிறக்கின்றன, எனவே நஞ்சுக்கொடியில் காயங்கள் இருப்பதை பார்க்க முடியாது. ஆனால் இந்த கொரோனா நோய்த்தொற்று நஞ்சுக்கொடியில்  காயங்களைத் ஏற்படுத்துகிறது. எனவே கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கர்பிணிகள் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்…

மன அழுத்தமற்ற பரிசோதனைகள் மூலம் இந்த கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.  நஞ்சுக்கொடி எவ்வாறு ஆக்ஸிஜனை கொடுக்கிறது, மற்றும் குழந்தையின் வளர்ச்சி ஆகியவற்றை  அல்ட்ராசவுண்ட் பரிசோதனை மூலம் அறிந்துக்கொள்ளமுடியும்….. கர்ப்பிணிப் பெண்களை நன்கு கண்காணிப்பதே தற்போது கொரோனாவால் எழுந்துள்ள சிக்கலுக்கான முடிவு ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

  • நஞ்சுக்கொடியில் சேதம் ஏற்படுவதுகருவை எவ்வாறு பாதிக்கும்?

தாயிடம் இருந்து நஞ்சுக்கொடி மூலமாக ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் கருவுக்குக் கிடைக்கிறது.  தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கும் இதுவே காரணமாகும். நிபுணர்களின் கூற்றுப்படி, நஞ்சுக்கொடியானது கருவுக்கு வென்டிலேட்டர் போல செயல்படுகிறது. அதில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால், அதன் தாக்கம் கருவை பாதிக்கக்கூடும்….. 

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னெச்சரிக்கைகள்

கருவுற்றப் பெண்கள், முன்னெச்சரிக்கையை கடைபிடிக்க வேண்டியது அவசியமானது.   கைகளை அடிக்கடி நன்றாக கழுவவும், சமூக விலகலை பின்பற்றவும்.  தனிநபர் இடைவெளியை இடைவிடாமல் கடைபிடிக்கவும்.  வெளியில் சென்று வேறு யாருடமும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.   சுவாசிப்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதை அலட்சியப்படுத்தவேண்டாம்.  சளி , இருமல் அல்லது தும்மல் வந்தால், வாயை டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி பிறருக்கு பரவாமல் தடுக்கவும்.   பயன்படுத்திய டிஷ்யூவை  குப்பைத்தொட்டியில் போடவும்…பின்னர் கைகளை நன்றாக கழுவவும். எந்தவொரு சூழ்நிலையிலும் குழந்தை பிறப்பதற்கு முன்பு வழக்கமாக மருத்துவரிடம் இருந்து பெறும் ஆலோசனைகளை புறக்கணிக்க வேண்டாம். 

மொழியாக்கம் - ஹேமலதா

 

Trending News