பெளர்ணமி நாளன்று வானில் நிலவு தோன்றுவதை பார்ப்பதற்கு அனைவருக்கும் பிடிக்கும். காதலுக்கும் நிலவுக்கும் இடையில் பல தொடர்புகளை தமிழ் கவிஞர்கள் பெருமைப்படுத்தி காட்டியுள்ளனர். எது எப்படியிருந்தாலும் சரி, இன்று, பவுர்ணமியாக இல்லாவிட்டாலும், நிலவை பார்ப்பது சரித்திர சாதனைகளை நினைவுபடுத்தும்.
ஜூலை 20, 1961 இல், நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் என்ற சாதனையை படைத்தார். அன்றிலிருந்து, ஜூலை 20ஆம் நாள் சந்திரன் தினமாக கொண்டாடப்படுகிறது. மனிதகுலம் எல்லா காலத்திலும் மிகப்பெரிய சாதனைகளை மதிக்கிறது.
விண்வெளிப் பயணம் அடுத்த பெரிய விஷயம் என்று கூறப்பட்டாலும், நம்மில் பெரும்பாலோர் விண்வெளியில் பயணம் செய்து சந்திரனுக்கு ஒரு பயணம் மேற்கொள்ள இன்னும் சில காலம் ஆகலாம், வரலாற்று ரீதியான தரையிறக்கத்தின் 60 வது ஆண்டு நிறைவை நாம் நிச்சயமாக நினைவுகூரலாம். நாம் இருக்கும் இடத்தின் மேலே இருந்தே இரவில் வானில் தோன்றும் நிலவை பார்த்து, மனிதனின் சாதனைகளை நினைத்து பெருமை கொள்ளலாம்.
Also Read | IRCTC வழங்கும் 'Alert' சேவை; இனி கன்பர்ம் டிக்கெட் பெறுவது மிக எளிது..!!!
வானில் சந்திரனை முழுமையாக நெருக்கமாக பார்க்க உகந்த இடங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரமான இடங்களில் கூடாரத்தை அமைத்து சந்திரனைக் காணலாம், நட்சத்திரங்கள் கண்சிமிட்டும் வானம் எல்லையற்று பரந்து விரிந்திருந்தாலும், அதன் மகுடமாக திகழும் சந்திரனை பார்ஹ்த்டு மகிழலாம்.
தமிழ்நாட்டில் உள்ள வெள்ளகவி கிராமம் 1300 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குக்கிராமம், விண்மீன்கள் நிறைந்த நிலவொளி இரவைத் தேடும் பயணிகளுக்கு சிறந்த முகாமாக அமைகிறது வெள்ளகவி.
வெள்ளகவி கிராமத்திற்கு செல்வதே ஒரு சுகானுபவம். அடர்த்தியான கும்பகரை காடு வழியாக மலையேறி சென்று கிராமத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். இயற்கை கொஞ்சும் பசுமையை அனுபவிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும். போகும் வழியில் நீர்வீழ்ச்சிகளையும், சுனைகளையும்பார்த்துக் கொண்டே செல்லலாம்.
இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் முகாம் அமைத்து தங்கி, இரவில் வானில் தோன்றும் நிலவை ரசிக்கலாம். அதிலும், இப்போது நிலவும் அருமையான தட்பவெட்பம் நிலவை காதலியுடன் அனுபவிக்க மிகவும் உகந்ததாக இருக்கும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR