Tips To Get Rid Of Lizards At Home Naturally : பலருக்கு கேட்டவுடன் அருவருப்பை வரவழைக்கும் ஒரு பெயர் ‘பல்லி’. பார்க்கவும் சரி, உடலில் ஊறினாலும் சரி இது தரும் உணர்வு பலரை பயத்திலும் எரிச்சலிலும் கண்களை மூட வைத்து விடும். பல்லி கடித்தவுடன் உயிர் போய்விட போய்வதில்லை என்றாலும், இது மேலே பட்டால் வரும் அந்த அச்ச உணர்வினை விவரிக்க வேறு வார்த்தைகளே இல்லை.
வீட்டில், ஓரிரண்டு பல்லிகள் ஆங்காங்கே கண்களுக்கு தெரியாமல் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், ஒரு சில இல்லங்களில் ஒரு அறையில் மட்டும் 10க்கும் மேற்பட்ட பல்லிகள் இருக்கும். ஒரு சில தருணங்களில், வீட்டில் சுத்தம் இல்லாத காரணத்தாலும் அதிக பல்லிகள் கூடலாம். இதை ஒரே அடியாக வீட்டிலிருந்து விரட்டியடிக்க நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
பெப்பர் ஸ்ப்ரே:
பெண்கள் பலர் பாதுகாப்பிற்காக தங்களின் பைக்குள் வைத்திருக்கும் ஒரு ஸ்ப்ரேதான் இந்த பெப்பர் ஸ்ப்ரே. இது வாசனை திரவியம் இல்லை என்றாலும், கயவர்களை கண் இமைக்கும் நேரத்தில் தடுமாற வைக்கும் ஸ்ப்ரே இது. இதை வைத்து பல்லியையும் பலேவாக விரட்டலாம். தண்ணீருடன் சேர்த்து, கருப்பு மிளகை அரைத்து அதை ஸ்ப்ரேவாக ஒரு பாட்டிலில் போட்டுக்கொள்ளலாம். எங்கெல்லாம் பல்லியை பார்க்கிறீர்களோ, அங்கெல்லாம் இந்த ஸ்ப்ரேவை அடிக்கலாம். பொதுவாகவே பல்லிகளுக்கு மிளகு என்றால் அலர்ஜியாம். எனவே, இதனை நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம். அப்படி மிளகு ஸ்ப்ரே இல்லை என்றால், சில்லி ஃப்ளேக்ஸ், ஹாட் சாஸ் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
வெங்காயம் மற்றும் பூண்டு:
வெங்காயம் மற்றும் பூண்டு ஆகிய இரண்டுமே இந்திய சமையலறையில் இருப்பதுடன் சமையலிலும் கண்டிப்பாக இடம் பெறும் உணவு பொருட்களாகும். அது மட்டுமன்றி, இவை அதிக வாசணை மிக்கவையாகவும் இருக்கும். பல்லிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் அவற்றை விரட்டுவதற்கு இது ஒரு லேசான வழியாகும். எனவே, வெங்காயத்தின் இரண்டு துண்டுகள் அல்லது பச்சை பூண்டு பல் ஆகியவற்றை வீட்டின் அனைத்து மூலைகளிலும் வைக்கவும். இதை அப்படியே வைக்க வேண்டாம். ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் போட்டு, அதில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி வைத்தால் இயற்கை பல்லி விரட்டியாக இது உதவும்.
மேலும் படிக்க | இரயிலில் பல்லி பிரியாணி?
ரசகற்பூரம்:
நம் வீட்டில், பூச்சுகள் அண்டாமல் இருக்க, துணிகளை பூச்சிகள் பாழ் செய்யாமல் இருக்க இந்த ரசக்கற்பூரத்தை துணி இருக்கும் இடங்களில் வைத்திருப்போம். இது, பல்லிகளை விரட்டி அடிக்கவும் உதவுமாம். பல்லிகள் அதிகம் புழங்கும் இடங்களான கிச்சனின் கபர்டுகள், பொருட்களை சேமித்து வைக்கும் இடங்கள், சிங்கிற்கு அடியில் என அனைத்து இடங்களிலும் வைத்து விடுங்கள்.
கெட்டு போன பொருட்கள்:
ஒரு சில இல்லங்களில் கெட்டுப்போன பொருட்களில் வாசனைக்காகவும் பல்லிகள் வரும். எனவே, அப்படி கெட்டுப்போன அல்லது மிஞ்சிப்போன
பிற வழிகள்:
>பல்லிகளுக்கு ஒவ்வாத வாசனைகளுள் ஒன்று, முட்டை ஓடு. எனவே, முட்டை ஓட்டினை உங்கள் இல்லங்களின் அனைத்து மூலைகளிலும் வையுங்கள்.
>உங்கள் கண் எதிரே பல்லி தோன்றினால், அதன் மீது குளிர்ந்த நீரை தெளிக்கலாம். அது பயந்து ஓடி விடும்.
>பல்லிகளை விரட்டுவதற்கு சில பொருட்கள் கடைகளில் விற்கின்றன. அவற்றையும் உபயோகிக்கலாம்.
மேலும் படிக்க | வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா? நிரந்தர தீர்வுக்கு இதப் பண்ணுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ