Reasons Why You Are Always Feeling Sleepy : தூக்கம் என்பது அனைவருக்கும் பொதுவான மற்றும் தேவையான ஒன்று. இது இல்லை என்றால், கண்டிப்பாக உடலுக்கு தேவையான சக்தி, நமக்கு கிடைக்காது. ஒருவர், என்னதான் விழுந்து விழுந்து வர்க்-அவுட் செய்தாலும், நல்ல உணவுகளை சாப்பிட்டாலும் 8 மணி நேர தூக்கம் இல்லை என்றால், அவ்வப்போது உடல்நலக்குறைவால் பாதிக்கப்படுவர். ஒரு சிலருக்கு, எவ்வளவு உறங்கினாலும், பகல் நேரத்தில் தூக்க கலக்கமாகவே இருக்கும். இதனால், எவ்வளவு முயற்சி செய்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அவர்களால் கொடுத்த வேலையை முடிக்க முடியாது. இதற்கு காரணம் என்ன?
இரும்புச்சத்து குறைபாடு:
ஒருவருக்கு எப்போதும் உறக்கம் வந்து கொண்டே இருக்கிறது என்றால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கிறது என்று அர்த்தமாம். இதனால், உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைவாகிறது. இது, உடலில் எனர்ஜி கொடுக்கும் செல்கள் குறைந்து, சோர்வான உணரவு தூண்டுகிறது. இது, உடல் பலவீனமானது போல் தோன்றுவது மட்டுமன்றி, கையில் இருக்கும் வேலைகளையும் முடிக்க முடியாமல் போகலாம்.
உடல்நல குறைபாடுகள்:
உடலில், ஏதேனும் மருத்துவ குறைபாடுகள் இருந்தால், இது போல எப்போது உறக்கம் வந்துகொண்டே இருக்கும். ஹைப்போ தைராய்டிசம், இரத்த சோகை, சர்க்கரை நோய், மூச்சுத்திணறல் பிரச்சனை ஆகியவை இருந்தால், இது போன்ற பிரச்சனைகள் இருந்தால் எப்போதும் உறக்க நிலையிலேயே இருப்பீர்கள். இது, உங்களை தினசரி இயங்க விடாமலும் செய்யலாம்.
உடலுக்கு உழைப்பு கொடுக்காத வேலைகள்:
தற்போதைய உலகில், பலருக்கும் உடலுக்கு சரியான உழைப்பு கொடுக்காத வேலைதான் இருக்கிறது. இப்படி, உடலுக்கு வேலை கொடுக்காத தொழிலில் இருப்பவர்கள், எப்போதும் தூக்க கலக்கத்துடன் உணர்கின்றனர். இப்படி, உடலுக்கு வேலை கொடுக்காமல் இருப்பதால், உடலில் ரத்த ஓட்டம் குறைவாகிறது. இதனால், தூக்கத்தின் அளவு மாறுவதுடன் சோம்பேறித்தனமான மனநிலையும் வளருகிறது.
மேலும் படிக்க | பகலில் போடும் குட்டி தூக்கம் ஏற்படுத்தும் பெரிய சிக்கல்..!
போதுமான நீர்ச்சத்து இல்லாதது:
உடலில், நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் சரியாக குடிக்கவில்லை என்றாலோ, சரியாக சாப்பிடவில்லை என்றாலோ இது போன்ற தூக்க நிலை ஏற்படலாம். இதனால், எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாது. எப்போதும் சோர்வான மனநிலையே இருக்கும்.
சரியான தூக்கமின்மை:
ஒருவருக்கு, சராசரி 7-9 மணி நேரம் தூக்கம் சரியாக இருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இந்த நேரத்தில், அவ்வப்போது விழித்துக்கொள்வது, சிறிது நேரம் தூங்குவது பகல் நேரத்திலும் உறக்கம் வருவது போன்ற உணர்வை கொடுக்கும். எனவே, இரவில் சரியாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உறங்க சென்று, சரியான நேரத்தில் எழுந்துகொள்ள வேண்டும்.
மருந்துகள்:
ஒரு சிலர், தங்கள் உடல் அல்லது மனப்பிரச்சனை காரணமாக, மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டிய நிலை வரலாம். இது, பல சமயங்களில் தூக்கத்தை கெடுக்கும் நிலை வரலாம். அதே போல, போதை மருந்துகள் அல்லது மது உள்ளிட்ட விஷயங்களை எடுத்துக்கொண்டால், இரவில் தூக்கம் கெடுவதுடன், பகலில் தூக்கம் வரும்.
வானிலை மாற்றங்கள்:
நமக்கு தூக்கம் வருவது, வெளியில் இருக்கும் வானிலைகளை வைத்தும் அமையும். நவம்பர்-டிசம்பர் மாதங்களில், தமிழகம் முழுவதும் மழையும்-புயலுமாக இருக்கும். எனவே, பலர் இது போன்ற சமயங்களில் பலர் தூக்க கலக்கம் போல இருப்பதாக உணருவர்.
மேலும் படிக்க | இரவில் தூக்கம் வரவில்லையா? மாரடைப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ