புதுடெல்லி: இந்தியாவின் இந்த கோவிலில் திமிங்கல மீன் வழிபடப்படுகிறது, 300 ஆண்டுகளாக திமிங்கலத்தை வழிபடும் இந்த ஊரில் பல அதிசயங்கள் நடந்துள்ளன.
குஜராத்தின் வல்சாத் தாலுகாவின் மகோட் டுங்ரி கிராமத்தில் திமிங்கல மீன் கோவில் உள்ளது. இந்த கோவில் மத்ஸ்ய மாதாஜி கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் இந்த கோவிலில் திமிங்கலம் வழிபடப்படுகிறது.
சனதன தர்மத்தில் 33 கோடி தெய்வங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இறைவனையும் இயற்கையின் ஒவ்வொரு வடிவத்தையும் வணங்கும் நம் நாட்டில் திமிங்கல மீன்களை வழிபடும் கோவிலும் (Iindian Temple) இருக்கிறது. குஜராத்தின் வல்சாத் தாலுகாவின் மகோட் டுங்ரி கிராமத்தில் திமிங்கல மீன் கோவிலை கிராம மீனவர்கள் கட்டியுள்ளனர்.
Read Also | முஸ்லீம் நாட்டில் விநாயகருக்கு கோவில் இருப்பது தெரியுமா?
கோவில் கட்டச் சொல்லி கனவில் வந்த உத்தரவு
இந்த கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தண்டேல் என்பவர் வாழ்ந்துவந்தார். ஒரு நாள் இரவு, அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு கனவு வந்தது. அதில் கடற்கரைக்கு வரும் ஒரு மீன் மிகப் பெரியதாக இருந்தது. பின்னர் அந்த மீன் தெய்வத்தின் வடிவத்தை எடுத்து கரையை நோக்கி வருகிறது. ஆனால் தரையை வந்தவுடன் இறந்துவிடுகிறது.
இந்த கனவு, பிரவு தண்டேலுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தனது கனவு குறித்து, கிராம மக்களிடம் பேசினார். பிறகு, அவர்கள் கரைக்கு வந்தபோது, அங்கு அவர் கனவில் வந்ததுபோலவே இருந்த ஒரு மீன் உண்மையிலேயே இறந்து கிடப்பதைக் கண்டார்.
இதைக் கண்ட மக்கள், திமிங்கலத்தை அம்மனின் அவதாரமாகக் கருதி, கடற்கரையில் பிரமாண்டமான மீன் தெய்வம் கோயிலைக் கட்ட முடிவெடுத்தார்.
Read Also | இந்தியாவின் மிக அழகான, அற்புதமான கோவில்கள்
திமிங்கலத்தை கரைக்கு அருகிலேயே புதைக்க முடிவு செய்தனர். மேலும் அந்த திமிங்கலத்தின் எலும்புகளை மட்டும் வெளியே எடுத்துவிட்டு மீனை புதைத்துவிட்டனர். பிறகு திமிங்கலத்தின் எலும்புகள் கோவிலில் வைக்கப்பட்டன.
கிராமத்தில் நோய் பரவியது
கிராமத்தைச் சேர்ந்த சிலருக்கு இந்த மீன் அன்னையின் கோவில் பற்றி பெரிய மதிப்பு ஏற்படவில்லை என்றும், கோயில் கட்டுவதில் அவர் எந்த உதவியும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
கிராமத்தில் நோய் பரவியது. அதற்கு காரணம் தங்கள் நம்பிக்கையின்மை என்று நினைத்த மக்கள் தவறை உணர்ந்து கோயிலுக்குச் சென்று மீன் அன்னையிடம் மன்னிப்பு கேட்டனர். பின்னர் கிராமத்தில் நோய் முடிவுக்கு வந்தது.
இன்றும் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் முன், மீனவர்கள், மத்ஸ்ய மாதாஜி கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டப்பிறகு தான் கடலுக்கு செல்கின்றனர்.
பிரபு தண்டேலின் குடும்பத்தின் வழித்தோன்றல்கள் தான், இன்றும் இந்தக் கோயிலைப் பராமரித்து வருகின்றனர். ஆண்டுதோறும், நவராத்திரி அஷ்டமி அன்று இங்கு பிரமாண்டமான திருவிழா நடத்தப்படுகிறது. இது இந்தியாவின் திமிங்கலக் கோவில்.
Also Read | புராதனமும், நவீனமும் இணையும் காசி விஸ்வநாதர் கோவில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR