சோமாட்டோவில் உணவு ஆர்டர் செய்த நபர்டெலிவரி பையுடன் இலவசமாக பயணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது!!
உணவு விநியோக செய்யும் Zomato நிறுவனம் நல்ல விதத்திலோ, கேட்ட விதத்திலோ ஏதாவது ஒரு முறையில் வாரத்திற்கு ஒரு முறையாவது இணையதளத்தில் வைரளாகி விடுகிறது. இந்நிலையில், Zomato ஊழியர் வாடிக்கையாளருக்கு உதவியது இணையதளத்தில் வைரலாக அரவி வருகிறது.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஒபேஷ் கோமிரிசெட்டி (Obesh Komirisetty) என்ற இளைஞர் ஐதராபாத்தில் உள்ள இன் ஆர்பிட் மாலிற்கு சென்றுள்ளார். அவர் வீடு திரும்பும்போது கேப் புக் செய்துள்ளார். எண்ணினார். அந்த நேரம் கேப்வும் அதிக விலை காட்டியுள்ளது. அவர் இருக்கும் இடத்திலிருந்து வீட்டிற்கு செல்ல 300 ரூபாய் என காட்டியுள்ளது. மிகவும் அதிகமான தொகையாக இருக்கிறதே என யோசித்த இளைஞருக்கு அற்புதமான யோசனைக் கிட்டியுள்ளது.
அப்போது அவர் அருகில் எந்த ஹோட்டல் இருக்கிறது என்று பார்த்ததில் தோசை பந்தி என்ற கடை இருந்துள்ளது. ஸொமடோவில் அந்த கடையில் ஒரு தோசை ஆர்டர் செய்துள்ளார்.
பின் அந்த ஹோட்டலுக்கு வெளியே காத்திருக்க ஆர்டரை எடுக்க ஸொமேட்டோ ஊழியர் வந்திருக்கிறார். பின் அவரிடம் நான் தான் ஆர்டர் செய்தேன். நீங்கள் செல்லவிருக்கும் இடம் என் வீடு தான். என்னையும் உடன் அழைத்துச் சென்று இறக்கிவிடுங்கள் என ஆர்டரை எடுத்துக்கொண்டு ஸொமடோ ஊழியருடன் இலவசமாக பயணித்து வீட்டிற்குச் சென்று இறங்கியுள்ளார். இறுதியாக அந்த ஊழியரும் ஸ்டார் ரேட்டிங் போடுங்கள் என சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்த நிகழ்வை ஓபிஷ் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்து இலவச ரைடிற்காக சோமாட்டோ நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். இதற்கு சோமாட்டோ நிறுவனம் நவீன பிரச்னைக்கான நவீன தீர்வு என பதிலளித்துள்ளது. மேலும் பலர் இதற்குக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த முகநூல் பதிவு இணையதலத்தில் விரலாக பரவி வருகிறது.
Modern problems require modern solutions. PC pic.twitter.com/2bmo7EMIpu
— Zomato Care (@zomatocare) August 6, 2019