Home Loan: எந்த வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது?

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தால், அது கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்தும் EMI தொகையை குறைக்கும்

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 6, 2021, 06:49 PM IST
  • எந்த வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது?
  • அதிக கடன் மற்றும் நீண்ட கால தவணை
  • வீட்டுக் கடனுக்கான வட்டியைத் தவிர கூடுதல் கட்டணங்களும் உண்டு
Home Loan: எந்த வங்கி குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்கிறது? title=

ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தை சீர் செய்ய, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாக உள்ளது.  

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைந்தால், அது கடன் வாங்கியவர்கள் மாதந்தோறும் செலுத்தும் இ‌எம்‌ஐ (Home Loan EMI Calculator) தொகையை குறைக்கும்.அதோடு, கடனுக்கான ஒட்டுமொத்த வட்டியையும் குறைக்கும்.  

தற்போது, எஸ்பிஐ (SBI Home Loan), கோட்டக் மஹிந்திரா (Kotak Mahindra Bank Loan), எச்.டி.எஃப்.(HDFC Home Loan) சி என வெவ்வேறு வங்கிகள் கொடுக்கும் வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைப் பார்க்கலாம்.

Also Read | Google Chrome பாதுகாப்பு விதிகளில் மாற்றம் செய்கிறது; பயனர்கள் be ALERT

வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மிக முக்கியமான காரணிகளில் ஒன்றாகும், வீட்டின் மொத்த செலவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. அதிக கடன் மற்றும் நீண்ட கால தவணை, இவை இரண்டும் வீட்டுக் கடனின் முக்கியமான இரு அம்சங்கள். எனவே, வட்டி விகிதங்களில் ஒரு சதவிகித வித்தியாசம் கூட கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும்.

எனவே, கிடைக்கக்கூடிய அனைத்து தெரிவுகளையும் பார்த்து, மிகக் குறைந்த வட்டியில் கடன் (Low Interest rates, Home loan) வழங்கும் வங்கியைத் தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமான ஒன்று.

வீட்டுக் கடன் வாங்கும்போது, வட்டி விகிதங்களுடன், வேறு பல கட்டணங்களும் கடனை ஒட்டுமொத்தமாக பாதிக்கின்றன என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். கடன் வாங்குவதற்கு முன்னதாகவே, விண்ணப்பம் கொடுக்கும்போதே கொடுக்க வேண்டிய முன் கட்டணம் மற்றும் CERSAI செலவுகள் ஆகியவையும் வீட்டுக் கடனில் அடங்கும்.  

Also Read | WWDC 2021: கணினியில் ஆப்பிளின் WWDC நேரடி நிகழ்வை பார்ப்பது எப்படி? 

சில கடன் வழங்குநர்கள், வீட்டுக் கடனுக்கு கொடுக்கும் வட்டி விகிதம் ஒன்றுபோல இருக்கலாம், ஆனால், கூடுதல் கட்டணங்கள் மாறுபடும். இதுபோன்ற நிகழ்வுகளில், தொடர்புடைய கட்டணங்கள் மொத்த வீட்டுக் கடனுக்கான செலவில் பெரும் வித்தியாசத்தை உருவாக்கக்கூடும்.

தற்போது, வழங்கப்படும் வீட்டுக் கடன்களின் வட்டி விகிதங்கள் (Loan Interest Rates) அவ்வப்போது மாறக்கூடியவை. இவை floating rates என அழைக்கப்படுகின்றன. பெரும்பாலும் ரிசர்வ் வங்கியின் ரெப்போ வீதத்தை அளவுகோலாக வைத்தே வங்கிகள், கடனுக்கான வட்டி விகிதங்களை நிர்ணயிக்கின்றன.

வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களின் பட்டியல்:

தற்போது கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) வீட்டுக் கடன் வட்டி விகிதத்தில் 10 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்திருப்பதால், வட்டி விகிதமானது ஆண்டுக்கு 6.65 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. இது தற்போது சந்தையில் வீட்டுக் கடன்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த வட்டி வீதமாகும். செயலாக்க கட்டணம், ஜிஎஸ்டி உட்பட, 0.50% வரை மற்றும் சட்டரீதியான கட்டணங்கள் செலுத்தவேண்டும்.

Also Read | June 6 in history: சரித்திரத்தில் இன்றைய நாளின் முக்கியத்துவம் என்ன?

பஞ்சாப் & சிந்து வங்கி (Punjab & Sind Bank), 6.65% என்ற கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகிறது. அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை இந்தக் கடன்கள் வழங்குகப்படுகின்றன. செயலாக்கக் கட்டணங்கள் இந்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை குறைக்கப்பட்டுள்ளன.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீட்டுக் கடன்கள் 6.70% வட்டி விகிதத்தில் கிடைக்கின்றன. வீட்டுக் கடன் வாங்கும் பெண்களுக்கு வங்கி கூடுதல் சலுகையை வழங்குகிறது.  

 எச்.டி.எஃப்.சி வங்கி, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை 6.75 சதவிகிதமாக HDFC நிர்ணயித்திருக்கிறது., ஆனால் சம்பளம் வாங்குபவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் என்ற பிரிவுக்கு ஏற்ப செயலாக்க கட்டணம் மாறுபடும். சம்பளம் / சுயதொழில் வல்லுநர்களைப் பொறுத்தவரை, முன்பதிவு கட்டணம் கடன் தொகையில் 0.5% வரை அல்லது ரூ. 3000, எது அதிகமாக இருந்தாலும் அதை கடனுக்கு விண்ணப்பிப்பவர்கள் கட்ட வேண்டும். சுயதொழில் புரியாதவர்களுக்கு, கட்டணம் கடன் தொகையில் 1.5% வரை அல்லது 4,500 ரூபாய்

ஐசிஐசிஐ (ICICI Home Loan) வங்கி, 6.75% வட்டியில் ஐ.சி.ஐ.சி.ஐ வீட்டுக் கடன்களை வழங்குகிறது. செயலாக்க கட்டணம் வேலைவாய்ப்பு வகையைப் பொறுத்து மாறுபடும்.

Also Read | AIDS பாதித்த பெண்ணுக்கு 6 மாதங்களாக கோவிட், என்ன நடந்தது?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News