மழைக்காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது - இந்த பிரச்சனைகள் வரலாம்

Coconut water Benefits, Rainy season : கோடைகாலத்தில் அதிகம் இளநீர் குடித்ததைப்போலவே, மழைக்காலத்திலும் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கு நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 12, 2024, 10:20 AM IST
  • மழைக்காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா?
  • ஒவ்வாமை பிரச்சனை ஏற்பட உங்களுக்கு வாய்ப்பு
  • அதிகம் குடித்தால் இப்பிரச்சனை வரும் என்கிறார்கள்
மழைக்காலத்தில் தேங்காய் தண்ணீர் குடிக்கக்கூடாது - இந்த பிரச்சனைகள் வரலாம் title=

Coconut water Lifestyle News : ஒவ்வொரு பருவத்துக்கு ஏற்றார்போல தான் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனைப்போலவே தான் தேங்காய் தண்ணீர் (இளநீர்) குடிப்பதும். கோடைக்காலத்தில் அதிகமாக தேங்காய் தண்ணீர் குடித்ததைப் போல மழைக்காலத்திலும் இளநீர் குடிக்கலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. தேங்காய் தண்ணீர் உடலில் ஏற்படும் நீர்ப்பற்றாக்குறையை போக்கும். செரிமான அமைப்பை சீராகவும் வலுவாகவும் வைத்திருக்கும் என்றாலும், மழைக்காலத்தில் அதிகம் இளநீர் குடிப்பது என்பது சில சிரமங்களை ஏற்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | வெஜிடேரியன்களுக்கு புரோடீன் சத்தை அள்ளிக்கொடுக்கும் குயினோவா, ஓட்மீல் : எது பெஸ்ட்?

தேங்காய் தண்ணீர் குடிக்கலாமா?

பொதுவாக இளநீர் எக்காலத்திலும் குடிக்கலாம். எல்லா பருவங்களுக்கும் ஏற்ற ஊட்டச்சத்துகள் இதில் இருக்கின்றன. தேங்காய் தண்ணீரில் இருக்கும் பல தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும் என்றாலும், குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளலாம். அந்தளவு தான் முக்கியம். பருவமழையில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, நோய்கள் விரைவாக தாக்கும் சூழல் இருக்கும். அந்தவகையில் பார்க்கும்போது தேங்காய் தண்ணீரை உட்கொள்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் பானமாகவும் இருக்கும். ஏற்கனவே கூறியதுபோல் இது செரிமான அமைப்பை மேம்படுத்தும். 

மழைக்காலத்தில், பாக்டீரியாக்கள் வயிற்றில் நுழைந்து வயிற்றில் தொந்தரவை ஏற்படுத்துகின்றன. இந்த சூழலுக்கும் தேங்காய் தண்ணீர் உங்களுக்கு உதவும். ஆனால் பிரெஷ்ஷான தேங்காய் தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். பழமையான அல்லது சில நாட்கள் பழமையான தேங்காய் தண்ணீர் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதேநேரத்தில், மழைக்காலத்தில் தேங்காய் தண்ணீரை அதிகமாக குடித்தால், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். ஏனென்றால், தேங்காய் நீரில் நிறைய சோடியம் உள்ளது. மழைக்காலங்களில் சோடியம் அதிகமாக உட்கொண்டால், அது வீக்கம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். 

மழைக்கால பிரச்சனைகள்

சிலருக்கு தேங்காய்த் தண்ணீரால் ஒவ்வாமை பிரச்சினைகள் இருக்கும். அப்படிப்பட்ட நிலையில் மழைக்காலத்தில் இதனை உட்கொண்டால் உடலில் வீக்கம், பித்தம், அரிப்பு போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கிறது. மேலும், மழைக்காலத்தில் இயல்பாகவே தொற்றுகள் அதிகம் பரவக்கூடிய காலகட்டம். இந்தநேரத்தில் மக்கள் தங்களின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் உடனடியாக மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றுக் கொண்டால் பெரிய பிரச்சனைகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | பற்களில் மஞ்சள் கறை போக... இந்த 3 பழங்களும் நல்லா வேலை செய்யும் - என்னென்னு பாருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News