Live-in Relationship, Advantages And Diadvantages: சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் மட்டுமின்றி இரண்டாம் கட்ட நகரங்களிலும் காதல் ஜோடிகள் லிவ்-இன் உறவில் இருப்பது வாடிக்கையாகிவிட்டது. திருமணத்திற்கு முன் தம்பதிகள் தாங்கள் ஒன்றாக வாழ்ந்து பார்க்கும் முறையாக இந்த லிவ்-இன் உறவு இருக்கிறது. குறிப்பாக, கல்லூரி முடித்து பணியில் இருக்கும் 23 வயதிற்கும் மேலான இளைஞர்கள்தான் லிவ்-இன் உறவில் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
நவீன காலகட்டத்தில் திருமண உறவு, குடும்ப உறவு ஆகியவை மீதான மதிப்புகள் குறைந்துள்ளன. அதுவும் திருமணத்திற்கு பின் விவாகரத்தும் அதிகமாகிறது. இதற்கு முக்கிய காரணம் தம்பதி சேர்ந்து வாழும்போதுதான் பிரச்னையே தொடங்குகிறது. எனவே, அந்த பிரச்னையை போக்க காதலர்கள் திருமணத்திற்கு முன்னரே ஒரே வீட்டில் இணைந்து வாழ முடிவெடுக்கிறார்கள். ஒருவேளை அது சரியாக செல்கிறது என்றால் திருமணத்தை நோக்கியும், அப்படி இல்லை என்றால் அப்போதே பிரிவை நோக்கியும் செல்ல முடிவெடுக்கின்றனர்.
லிவ்-இன் உறவு: சரியா? தவறா?
திருமணம் ஆகாமல் கணவன் - மனைவியாக வாழ்வது என எளிமையாக இந்த லிவ்-இன் உறவை புரிந்துகொள்ளலாம். பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், மன ரீதியாகவும் இணைந்து வாழ முடிகிறதா என்பதற்கு இந்த லிவ்-இன் உறவை காதல் ஜோடிகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். முதலில் டேட்டிங்கில் ஆரம்பித்து அது காதலாக வளர்ந்த பின்னர்தான் லிவ்-இன் உறவுக்கே அந்த காதலர்கள் நகர்வார்கள் எனலாம். அனைத்தையும் பொறுமையாக எடுத்துச்செல்லும்பட்சத்தில் குழப்பமோ, நெருக்கடியோ வராது.
மேலும் படிக்க | அறிவு முதிர்ச்சி இல்லாதவர்களை சமாளிக்க எளிய வழிகள்! ‘இதை’ பண்ணுங்க..
சரி இது தவறா, சரியா என நீங்கள் யோசிப்பது எனக்கு கேட்கிறது. ஆனால் இதை சரி, தவறு என சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரின் வாழ்வும், சூழலும் வேறு என்பதால் என் சரி உங்களுக்கு தவறாகக் கூட இருக்கலாம். ஆனால், இந்த லிவ்-இன் உறவில் இருக்கும் நன்மைகள் மற்றும் அதில் வரும் பிரச்னைகளை எடுத்துக்கூறுவது அவசியமாகிறது. இது இளைய தலைமுறையினருக்கு மட்டுமின்றி இந்த லிவ்-இன் உறவை தூரம் இருந்து பார்ப்பவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும்.
லிவ்-இன் உறவின் நன்மைகள்
- திருமணத்திற்கு முன்னரே அந்த ஜோடிக்கு நல்ல புரிதல் வந்துவிடும். எதை செய்தால் தனது பார்ட்னருக்கு பிடிக்கும், பிடிக்காது, எந்தெந்த சூழ்நிலையில் அவர் எப்படியெப்படி இருப்பார், அவரின் தேவைகள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.
- அதேபோல் அவரின் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை, பொருளாதார சார்ந்த விஷயங்கள், எதிர்கால திட்டமிடல் குறித்தும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம். இதனால் தேவையற்ற எதிர்பார்ப்புகள் எழாது, நீங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதை இதுவே உங்களுக்கு உணர்த்திவிடும்.
- குறிப்பாக, இருவரும் சேர்ந்து வாழும் போது மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பதை இப்போதே தெரிந்துகொள்ளலாம். எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு என இருக்கிறதா அல்லது அனுசரித்து போகும் மனப்பான்மை இருக்கிறதா என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
லிவ்-இன் உறவின் பிரச்னைகள்
- திருமணமாகாமல் உறவில் இருக்கும்போது பார்ட்னர் மீதான நம்பிக்கை எப்போதும் கேள்விக்குட்படுத்தப்பட்டே இருக்கும். எந்த நேரத்திலும் தன் பார்ட்னர் தன்னைவிட்டு போய்விடுவாரா என்ற அச்சத்தில் இருக்க நேரிடலாம்.
- இதுபோன்ற உறவில் இருந்தால் பிரேக்அப் வாய்ப்பும் அதிகம். இதனால் காதல் உறவிலும், திருமண உறவிலும் உங்களுக்கு கசப்பான சூழல்கள் ஏற்படலாம்.
- இதில் ஒருவரை பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சுரண்டும் வாய்ப்புகள் அதிகம். அதாவது, பெண்ணின் வருவாயிலேயே ஒரு ஆண் எவ்வித பங்களிப்பும் இல்லாமல் வாழ்ந்துவிட்டு, தனக்கு பிடிக்காத நேரத்தில் வெளியேறிவிடும் சூழல் இருக்கிறது.
- லிவ்-இன் உறவில் பொறுப்புகள் பெரிதாக இருக்காது. இதனால், அதிகமாக பாதுகாப்பற்ற சூழலில் இருக்க நேரிடலாம்.
- பெரும்பாலும் லிவ்-இன் உறவில் இருப்பவர்கள் பெற்றோரிடம் மறைத்து, யாருக்கும் தெரியாமல் இருப்பார்கள். இதுவும் பிரச்னையாக அமையலாம். பல இடங்களில் லிவ்-இன் உறவு சார்ந்த குற்றங்களையும் பார்க்க முடிகிறது.
மேலும் படிக்க | அழகாக இருப்பவர்கள் சிங்கிளாக இருப்பது ஏன்? 8 காரணங்கள்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ