உத்திர பிரதேச மாநிலம் மீரட் நகரில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில், காப்பாளர் பேய் வேடமிட்டு மாணவர்களை தவறாக தூண்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
உத்திர பிரதேசத்தின் மீரட் நகரில் உள்ள கஷ்துரி பா பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து தங்கள் விடுதி காப்பாளிரின் மீது புகார் அளித்துள்ளனர். இந்த புகாரில் தெரிவித்துள்ளதாவது... இரவு நேரங்களில் பேய் போல் வேடமிட்டு மாணவர்களிடம் தாகாத முறையில் நடந்துக்கொள்ள முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
Students of Kasturba Gandhi school allege that Warden dresses up as ghost & molests them at night. Accused warden, Poonam Bharti says, 'I've demanded investigation in this matter & have also told the authorities to check the CCTV footage. Truth will automatically be out.' #Meerut pic.twitter.com/vUkiRoH4Bl
— ANI UP (@ANINewsUP) May 22, 2018
மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடம் கொடுக்கப்பட்டுள்ள இப்புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ள விடுதி காப்பாளர் பூனம் பாரதி இதுகுறித்து தெரிவிக்கையில்.... நிச்சையம் இந்த புகாரை விசாரிக்க வேண்டும், விடுதியில் இருக்கும் CCTV கேமிரா காட்சிகளை கொண்டு விசாரணையினை நடத்த வேண்டும். அப்போது தான் எல்லோருக்கும் உன்மை புரியும் என தெரிவித்துள்ளார்.
இந்த புகார் குறித்து சிக்ஷா அதிகாரி சத்தேந்திர குமார் தெரிவிக்கையில், பள்ளியின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் மற்றும் மண்டல கல்வி அதிகாரி இணைந்து இந்த விவகாரம் குறித்து விசாரிப்பர் என தெரிவித்துள்ளார்.