ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இன்று 100_வது நாளாக போரட்டம் நடைபெற்றது. இதனால் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்தார் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர். தங்கள் உரிமைக்காகவும், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனக்கூறி அமைதி பேரணியாக பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி சென்றனர். அப்பொழுது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் போலீஸ் மற்றும் பொது மக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கலவரமாக மாறியதால், போலீசார் தடியடி நடத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்கள் வீசினர். இந்த கலவரத்தில் வாகனங்கள் தீ வைக்கப்பட்டன. பின்னர் கலெக்டர் அலுவலகத்திற்குள் புகுந்த போராட்ட கும்பல் கதவு, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார்கள்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு கமல்ஹாசன் கண்டனம்!
அவர்களை கட்டுப்படுத்த எந்தவித அறிவிப்பும் இன்றி போலீசார் தூப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த தூப்பாக்கி சூட்டில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 30-க்கு மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளனர். இச்சம்பவத்தை குறித்து பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
See pic's ஸ்டெர்லைட் போராட்டம் ஒரு பார்வை- ஐந்து பேர் பலி
இந்நிலையில், இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். அதில், "மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது. நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழக அரசே பொறுப்பு" எனக் கூறியுள்ளார்.
மக்களின் உணர்வுகளை மதிக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கின் விளைவாக இன்று பொதுமக்கள் சுடப்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பது மிகவும் வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது.நடந்த வன்முறை மற்றும் பொது ஜன உயிரிழப்புகளுக்கு தமிழகஅரசே பொறுப்பு.
— Rajinikanth (@rajinikanth) May 22, 2018