சினிமாவிலிருந்து சில காலம் ஒதுங்கியிருந்த சிம்புவுக்கு வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படம் கம்பேக் கொடுத்தது. அந்தப் படம் மாபெரும் வெற்றியடைந்ததை அடுத்து சிம்பு மீண்டும் கோலிவுட்டில் பிஸியானார். அந்தவகையில் கௌதம் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு, கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார், கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். இதுமட்டுமின்றி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் அவர் நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. வெந்து தணிந்தது காடு படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
இதில் பத்து தல படத்தை சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை உள்ளிட்ட படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Shooting in progress…. #PathuThala pic.twitter.com/8ghqApLijf
— Silambarasan TR (@SilambarasanTR_) August 1, 2022
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார். சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்து தல' படத்தின் சிறப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
மேலும் படிக்க | எஞ்சாயி எஞ்சாமி மெட்டு என்னுடையதுதான் - தெருக்குரல் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. இதனை சிம்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இப்படம் டிசம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
மேலும் படிக்க | ஒரே நாளில் 5 மில்லியன் பார்வைகள் - அசத்தும் பொன்னியின் செல்வன் சிங்கிள்
மேலும் படிக்க | சிக்கலில் அருண் விஜய்யின் ‘யானை’ படம்: உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ