தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களின் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விஜய். 90’ஸ்களில் தனது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய படங்கள் மூலம் திரையுலகிற்குள் பிரவேசித்து இன்று கோலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டாராக திகழ்கிறார். ரஜினி தான் எப்போது அரசியலுக்கு வரப்போகிறேன் என்பதை அவரது படங்களின் பஞ்ச் டைலாக்குகள் மூலம் க்ளூ கொடுத்தது விஜய்யும் தனது ரசிகர்களுக்கு படங்களின் மூலம் அவ்வப்போது ஹிண்ட் கொடுத்து வருகிறார்.
அரசியல் ஆசை?
தான் நடிக்கும் அனைத்து பட விழாக்களிலும் குறிப்பாக இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ள தவற மாட்டார், நடிகர் விஜய். சில ஆண்டுகளாக இவர் நடித்து வெளிவரும் படங்களில் அரசியல் வாடை கொஞ்சம் அதிகமாகவே வீசுகின்றன. தலைவா படத்தில் ஆரம்பித்த இந்த அரசியல் சர்ச்சை இன்றுவரை ஓயாமல் உள்ளது. அதை தூண்டிவிடும் வகையில், நடிகர் விஜய்யும் கிடைக்கும் தருவாயில் எல்லாம் “குட்டி ஸ்டோரி” கூறுகிறேன் என்ற பெயரில் ஏதாவது ஒரு கதையை கூறி அதிலும் அரசியல் புதிர் போடுவார். இதனால் இவருக்கு அரசியல் ஆசை இருக்குமோ என்ற சந்தேகம் வெகுநாட்களாகவே பலரது மனங்களில் இருந்து வருகிறது.
மேலும் படிக்க | கோவை: 5 நிமிடத்தில் 21 திருநங்கைகளுக்கு ஒப்பனை செய்து உலக சாதனை
விஜய் மக்கள் இயக்கம்:
பெரிய பெரிய நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பது வழக்கம். நடிகர் விஜய்யும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மக்களுக்கு தொண்டு செய்யும் விஜய் மக்கள் இயக்கத்தை நடத்திவந்தார். இந்த இயக்கம், படிப்படியாக உயர்ந்து இன்று அரசியல் கட்சியாக உருவாகும் அளவிற்கு பெரிதாக வளர்ந்துள்ளது. இதில் உருப்பினராக இருப்போர் அரசியலிலும் ஆக்டிவாக இருப்பதாக சில தகவல்கள் கூறுகின்றன.
2026 தேர்தலில் போட்டியிடும் விஜய்?
விஜய் மக்கள் நீதி மைய நிர்வாகிகள், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளோரின் விவரங்களை சைலண்டாக கலெக்ட் செய்து வருவதாக கூறப்படுகிறது. தளபதி மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் இதற்காக ஏப்ரல் 11ஆம் தேதி முதல் தமிழ் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டுள்ளதாக விஜய் மக்கள் நீதி மைய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த மன்றத்தை அரசியல் கட்சியாக வலுவாக்க பல திட்டங்கள் மேற்காெள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், விஜய் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதம், தனது பிறந்தநாளின் போது விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் கூட்டப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புஸ்ஸி ஆனந்தும், கடந்த 2020ஆம் ஆண்டு முதலே விஜய் விரைவில் அரசியல் களமிறங்குவார் என கூறிவருகிறார். இது உண்மையிலேயே நடக்குமா? 2026ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடுவாரா என்பது போன்ற கேள்விகள் ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளது.
அரசியல் புதிதல்ல...
அரசியலிற்கான முன்னோட்டத்தை விஜய், நெடுநாட்களாகவே பார்த்து வருகிறார். 2018ஆம் ஆண்டு வெளியான சர்கார் படத்தில் முழுக்க முழுக்க அரசியலையும் தமிழ் நாட்டின் அரசியல் நிலவரத்தையும் பேசிய விஜய், விரைவில் தன் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படியெதுவும் நடக்கவில்லை. 2019, 2020, 2022 ஆகிய ஆண்டுகளிள் நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றனர். இதுவே, விஜய்யின் ப்ராண்டிற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், விஜய் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் தரப்பிலிருந்து அவருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்ப படுகிறது.
மேலும் படிக்க | மாடர்ன் லவ் சென்னை... 18 பாடல்களும் வெளியீடு - யார் யார் எந்தெந்த பாடலுக்கு இசை?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ