கொரோனா தொற்றுக்கு ஆளான பிரபல நடிகை!

ராகவா லாரன்ஸின் 'முனி' படம் மூலம் பிரபலமான வேதிகாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Jun 21, 2022, 10:58 AM IST
  • நடிகை வேதிகாவிற்கு கொரோனா தொற்று.
  • தனிமைபடுத்தி கொண்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவு.
  • "வருந்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது" என்று மீண்டும் வலியுறுத்தினார்.
கொரோனா தொற்றுக்கு ஆளான பிரபல நடிகை! title=

முனி, காளை, சக்கரக்கட்டி, பரதேசி போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பிரபல நடிகை வேதிகாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தனக்கு கொரோனா தொற்று நோய் பாதித்திருப்பதை நடிகை வேதிகா அவரது ரசிகர்களுக்கும், அவரை பின் தொடர்பவர்களுக்கும் சமூக வலைதள பக்கத்தின் மூலம் தெரிவித்திருக்கிறார்.  மேலும் அவருக்கு அதிக காய்ச்சல் மற்றும் உடம்பு வலி போன்ற கடுமையான அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.  அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக எப்போதெல்லாம் வெளியே வருகிறீர்களா அப்போதெல்லாம் முகமூடிகளை அணிந்துகொண்டு செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்,  மேலும்  "வருந்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது" என்று மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும் படிக்க | 'புஷ்பா 2' படத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்?

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.  தற்போது தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது குறித்து அவரது ரசிகர்களிடம் கூறியதாவது, "அனைவருக்கும் வணக்கம்! நான் இப்போது துரதிருஷ்டவசமாக இருக்கிறேன், முதல் முறையாக நான் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.  கொரோனா நோய் பாதித்த எல்லா மக்களும் லேசான அறிகுறிகளை எதிர்கொள்வதில்லை, எனக்கு இப்போது அதிகளவில் காய்ச்சல் இருந்து வருகிறது, இந்த கடுமையான காய்ச்சல் எனக்கு கடந்த இரண்டு நாட்களாகவே இருந்து வருகிறது.  தயவு செய்து இதுபோன்ற அறிகுறிகளை குறைத்து மதிப்பிடாதீர்கள், பயங்கரமான உடல்வலி மற்றும் அதிக காய்ச்சலுடன் . 103 Fக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளேன்.  மேலும், நீங்கள் ஒருமுறை இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், மீண்டும் நாமம் நோய்த்தொற்று ஏற்படாது என்று நம்ப வேண்டாம்.  

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vedhika (@vedhika4u)

எனக்கு தெரிந்து சிலருக்கு ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்களுக்குள் மீண்டும் நோய்த்தொற்று ஏற்பட்டிருக்கிறது. எனவே தயவு செய்து உங்களை ஏமாற்ற வேண்டாம், வருந்துவதை விட பாதுகாப்பாக இருப்பது நல்லது.  உங்களுக்காகவும் உங்கள் அன்புக்குரியவருக்காகவும், நீங்கள் வெளியில் சென்றால் முகமூடி அணியுங்கள்.  நான் இப்போது இன்று நன்றாக இருக்கிறேன், விரைவில் சரியாகி விடுவேன், அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.  வேதிகா மலையாளத்தில் 'ஸ்ரிங்கரவேலன்', 'கசின்ஸ்', 'ஜேம்ஸ் & ஆலிஸ்' மற்றும் 'வெல்கம் டு சென்ட்ரல் ஜெயில்' ஆகிய படங்களில் நடித்தது பிரபலமானதன் மூலம் கேரளாவிலும் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் படிக்க | லைஃப்-ல எனக்கு இருக்க ஒரே ஃபீலிங் இதுதான் - வருத்தம் தெரிவித்த சுந்தர்.சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News