ரஜினிகாந்த் to ராம் சரண்- ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் தென்னிந்திய பிரபலங்கள்!

Ram Mandir Temple Opening Ceremony: அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் காேயில் நாளை திறக்கப்பட உள்ளதை ஒட்டி, அந்த விழாவில கலந்து கொள்ளும் தென்னிந்திய பிரபலங்களின் லிஸ்டை காணலாம்.  

Written by - Yuvashree | Last Updated : Jan 21, 2024, 02:26 PM IST
  • ராமர் கோயிலின் திறப்பு விழா நடைபெற உள்ளது.
  • இதில் தென்னிந்திய நடிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
  • அவர்களின் முழு லிஸ்ட் இதோ!
ரஜினிகாந்த் to ராம் சரண்- ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் தென்னிந்திய பிரபலங்கள்! title=

South Indian Actors Invited For Ram Mandir Temple Ceremony: நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா, நாளை (ஜனவரி 22ஆம் தேதி) நடைபெற இருக்கிறது. அயோத்தியில் உள்ள சரயு நதிக்கு அருகே கட்டப்பட்டுள்ள இந்த கோயில், பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்ட நடிகர்களும் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர். அப்படி இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பவர்கள் யார் யார் தெரியுமா?

ரஜினிகாந்த்:

தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரக வலம் வருபவர், ரஜினிகாந்த். இவர், சினிமா உலகில் மட்டுமன்றி தனிப்பட்ட வாழ்க்கையிலும் தனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்து வருகிறார். இவர், ஆன்மிக பயணத்தையும் அவ்வப்போது மேற்கொண்டு வருகிறார். தனது பிறந்தநாள், நல்ல நாள், வருடத்தில் சில நாள் என இமாலயத்திற்கு பயணம் மேற்கொள்வார். இதையடுத்து, நாளை நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று சென்னையில் இருந்து கிளம்பியுள்ளார். 

மோகன் லால்:

மலையாள ஸ்டார் நடிகர் மோகன் லாலிற்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவரது ‘மலைக்கோட்டை வாலிபன்’திரைப்படம், வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரமோஷன் விழாக்களில் மோகன் லால் கலந்து கொண்டு வருகிறார். பிசியாக இருக்கும் இவர், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு செல்வாரா இல்லையா என்பது சந்தேகம்தான் என கூறப்படுகிறது. இருப்பினும், தலைமையில் இருந்து அழைப்பு வந்துள்ளதால், கண்டிப்பாக செல்வார் என்றும் கூறப்படுகிறது. 

Ram Mandir

மேலும் படிக்க | 2k கிட்ஸ் பற்றி உருவாகி உள்ள சிக்லெட்ஸ்! வெளியானது ட்ரைலர்!

சிரஞ்சீவி:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. இவர், இந்த விழாவில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இவர், அடுத்து தெலுங்கு படத்தில் கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. 

ராம் சரண்:

சிரஞ்சீவியின் மகன் ராம் சரணிற்கும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வருவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர் மட்டுமன்றி இவரது மனைவி உபாசனா கொண்டீலாவிற்கும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இவர்கள் இருவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வர் என கூறப்படுகிறது. இவர்களுக்கு கோயில் அதிகாரிகள் வந்து அழைப்பிதழ் கொடுக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

ரிஷப் ஷெட்டி:

‘காந்தாரா’படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் ரிஷப் ஷெட்டி. இவர், இந்த படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். இவரும் இயல்பில் மிகவும் கடவுள் நம்பிக்கை அதிகமானவராக உள்ளார். இவரது படம், இவரை மத்திய அரசின் கவனம் ஈர்க்கும் வரை கொண்டு சென்றது. இந்த நிலையில், இவருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவரும் இதில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தனுஷ்;

நடிகர் தனுஷிற்கும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படம் ரிலீஸாகி ஒரு வழியாக கொஞ்சம் ஃப்ரீயாகியுள்ள தனுஷ், இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. தனுஷும், அதீத அளவில் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரபாஸ்:

‘ரிபஸ் ஸ்டார்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் பிரபாஸ், கடந்த ஆண்டு ராமாயணத்தை வைத்து எடுக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ படத்தில் ராமனாக நடித்தார். படம் ஹிட் ஆகவில்லை என்றாலும், இவர் ராமராக இந்தியா முழுவத்தும் ரிஜிஸ்டர் ஆகிவிட்டார். பிரபாஸிற்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர் இதில் கண்டிப்பாக கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. 

ஜூனியர் என்.டி.ஆர்:

மெகா குடும்பத்தை சேர்ந்த ஜூனியர் என்.டி.ஆர், ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இவர் நடித்த ஆர்ஆர்ஆர் படம் ஆஸகர் விருது கிடைத்தது. தேசிய விருதும் கிடைத்தது. இவரது தேவாரா திரைப்படம், ஏப்ரல் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. 

மேலும் படிக்க | Saravana Vickram: நடிப்பை விட்டு விலகும் சரவண விக்ரம்? இதுதான் காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News