Beast Mode:திரையை தீ பிடிக்க வைத்த பீஸ்ட் மோட் பாடல் வீடியோ..சில நொடிகளிலேயே பல ஆயிரம் லைக்ஸ்

பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருந்த பீஸ்ட் மோட் பாடலின் வீடியோ பட ரிலீஸிற்கு ஓராண்டிற்கு பிறகு வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : May 9, 2023, 06:34 PM IST
  • பீஸ்ட் படம் கிட்டத்தட்ட ஓராண்டிற்கு முன்னர் வெளியானது.
  • விமர்சன ரீதியாக பயங்கர அடிவாங்கிய படம், பீஸ்ட்.
  • விஜய்யும்-நெல்சனும் மீண்டும் கை கோர்க்க வாய்ப்பு உள்ளதா என ரசிகர்கள் சந்தேகம்.
Beast Mode:திரையை தீ பிடிக்க வைத்த பீஸ்ட் மோட் பாடல் வீடியோ..சில நொடிகளிலேயே பல ஆயிரம் லைக்ஸ் title=

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் ஹீரோவாக நடித்த பீஸ்ட் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், அனைவருக்கும் பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. கதைதான் பாரட்டப்படவில்லையே தவிர, படத்தின் பாடல்களும் ஒளிப்பதிவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருந்த “பீஸ்ட் மோட்” பாடல் தற்போது சன் மியூசிக் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. 

பீஸ்ட் மோட் பாடல்:

பீஸ்ட் படத்தில், இடம் பெற்றிருந்த பாடல்கள் அனைத்தும் யூடியூபில் இப்போதுவரை ட்ரெண்டிங்கிலேயே உள்ளது. உதாரணத்திற்கு, சிவகார்த்திகேயன் எழுதியிருந்த ஹலமதி ஹபீபோ பாடல் யூடியூபில் சுமார் 508 மில்லியன்களை தாண்டியுள்ளது. பீஸ்ட் படத்தில் இடம் பெற்றிருந்த மற்றொரு பாடல் ரசிகர்களின் மிகுந்த வரவேற்பினை பெற்றது. அந்த பாடல்தான், பீஸ்ட் மோட், “திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்..” என்ற அந்த பாடல் வரிகளை எழுதியது, கவிஞர் விவேக். இந்த பாடலின் லிரிக்கல் வீடியோவே, 58 மில்லியன்களை கடந்துள்ளது. இந்நிலையில், அப்பாடலின் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் 10 படங்கள் இவை தான்!

ரசிகர்கள் பலத்த வரவேற்பு:

பீஸ்ட் மோட் வீடியோ பாடலுக்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர். வெளியான சில மணித்துளிகளிலேயே, இப்பாடல் பல ஆயிரம் வியூஸ்களை எட்டியுள்ளது. அது மட்டுமன்றி, அனைவரும் லைக்ஸ்களையும் குவித்து வருகின்றனர். பீஸ்ட் படத்தின் ட்ரைலரை எப்படி நேர்த்தியாக வெட்டி-ஒட்டி இருந்தனரோ, அதே போல இந்த பாடலும் கரெக்டாக விஜய்யின் மாஸ் சீன்களால் நிரம்பியுள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

பீஸ்ட்-வெற்றியா? தோல்வியா?

நெல்சன் இயக்கியிருந்த பீஸ்ட் படம், விமர்சன ரீதியாக தோல்வியடைந்தாலும் வசூலில் சொதப்பவில்லை என சில ரசிகர்கள் கூறுகின்றனர். இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமே, படக்குழு கொடுத்த ஹைப்பும் அதற்கேற்ற திரைக்கதை படத்தில் காணாமல் போனதும்தான். மேலும், இப்படத்தின் க்ளைமேக்ஸில் ஜெட்டில் எத்ரெதிரே பறக்கும் விஜய்யும் இன்னோரு வீராங்கனையும் சல்யூட் வைத்துக்கொள்வது இந்தி திரையுலகம் வரை சென்று அங்கே மீம் கண்டண்டாக மாற்றப்பட்டது. 

ரஜினியுடன் கைகோர்த்த நெல்சன்-லோகேஷுடன் இணைந்த விஜய்

பீஸ்ட் படத்தையடுத்து, விஜய் வாரிசு படத்தில் நடித்தார். இப்படமும், விமர்சகர்களால் வருத்தெடுக்கப்பட்டது. இரண்டரை மணிநேர சீரியல் படம் என்றும் நெட்டிசன்களிடையே கலாய்க்கப்பட்டது. இதையடுத்து, விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதில், விஜய்யுடன் சேர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். பீஸ்ட் படத்தை அடுத்து, நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியுள்ளார். இப்படம், ஆகஸ்டு மாத ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது. இதில், ரஜினியுடன் சேர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இதனால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது. ஒரு படத்தில் சேர்ந்து கெட்ட பெயர் எடுத்த விஜய்-நெல்சன் இனி வரும் காலங்களில் சேர வாய்ப்பிருக்கிறதா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க | 'லியோ' படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் கெட்டப் இதுதானா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

 

 

Trending News