கேப்டன் அமெரிக்கா பாத்திரத்தை ஏற்க ஏன் தயங்கினார் கிறிஸ் எவன்ஸ்?

ஹாலிவுட்டின் நடிகர் கிறிஸ் எவன்ஸ் , “தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு” அளித்த பேட்டியில்,  தான் மார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க முதலில் தயங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கதாப்பாத்திரம் கிறிஸ் எவன்ஸின் விதியையே புரட்டிப் போட்ட பாத்திரம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

Last Updated : May 29, 2020, 12:13 AM IST
கேப்டன் அமெரிக்கா பாத்திரத்தை ஏற்க ஏன் தயங்கினார் கிறிஸ் எவன்ஸ்? title=

ஹாலிவுட்டின் நடிகர் கிறிஸ் எவன்ஸ் , “தி ஹாலிவுட் ரிப்போர்ட்டருக்கு” அளித்த பேட்டியில்,  தான் மார்வெல் சூப்பர் ஹீரோவாக நடிக்க முதலில் தயங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கதாப்பாத்திரம் கிறிஸ் எவன்ஸின் விதியையே புரட்டிப் போட்ட பாத்திரம் என்பதை நாம் மறுத்துவிட முடியாது.

பல ஆண்டுகளாக திரையுலகின் தன் பெயரை நிலைநாட்ட முயன்றுவந்த கிறிஸ் எவன்ஸ் , தன் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் வருந்திக்கொண்டிருந்த போது ,கிறிஸ் எவன்ஸுக்கு 'கேப்டன் அமெரிக்கா' படத்தில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தனது டப்பிங் படம்  'ஹ்யூமன் டார்ச் இன் ஃபென்டாஸ்டிக் ஃபோர்: ரைஸ் ஆஃப் தி சில்வர் சர்ஃபர்' திரைப்படத்தைக் குறித்து பதட்றம்மடைந்ததாக கிறிஸ் எவன்ஸ் வெளிப்படுத்தினார்.

2010 இல் 'பஞ்சர்' படப்பிடிப்பின் போது தன் எதிர்காலத்தைப் பற்றி நினைத்து பீதி தாக்குதல்களை எதிர்கொண்ட  கிறிஸ் எவன்ஸின் நிலை மோசமடைந்தது…..பல படங்களிள் நிராகரிக்கப்பட்டப் பின் ,கிறிஸ் எவன்ஸ் இருதியாக சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்…..

"செட்டில் என் நிலமை மோசமடைய தொடங்கியது…. உண்மையிலேயே நான் என் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினேன்….நடிப்பு  எனக்கு ஒத்துவருமா என்ற சிந்தனை என்னை உள்ளுக்குள் கொள்ளத்தொடங்கியது….. இதனால் என் ஆரோக்கியமும் பாதிக்கப்பட்டது…  

இன்னிலையில் ,2011 ஆம் ஆண்டின் 'கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்' படத்தில் 'கேப்டன் அமெரிக்கா' கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பை  அவர் நிராகரித்தார்.

ஆனால் மார்வெல் கைவிடவில்லை… அவர் மீண்டும் ஒருமுரை இந்த கதாப்பாத்திரத்தை பற்றி  வெளிப்படையாக எடுத்துரைத்தார் என எவன்ஸ் தெரிவித்தார்…

அவரது சிகிச்சையாளர், குடும்பத்தினர் மற்றும் இணை நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியருடன் பேச்சுவார்தைக்குப் பின் அவர்  இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்….

"இது நான் எடுத்த மிகச் சிறந்த முடிவாகும், மேலும் கெவின் ஃபைஜுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்,  அவரது விடாமுயற்சியால் தான் , நான் இவ்வலவு பெரிய தவறு செய்வதிலிருந்து தப்பித்தேன்….. எனக்கு உதவியதற்கு நான் அவருக்கு கடமைப்பட்டிருக்கிறேன்" என்று எவன்ஸ் கூறியுள்ளார். மேலும் "உண்மையைச் சொல்வதானால், நான் பயந்த விஷயங்கள், ஒருபோதும் எனக்கு பயனளிக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மொழியாக்கம் - ஹேமலதா.எஸ்

Trending News