மும்பை: நடிகைகளை ஆபாசமாக விமர்சிப்பதா என்று டைரக்சுராஜுக்கு, நடிகை தமன்னா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
விஷால் -தமன்னா ஜோடியாக நடித்த ‘கத்திச்சண்டை’ படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தை சுராஜ் டைரக்டு செய்துள்ளார். இதில், தமன்னா கவர்ச்சியாக நடித்துள்ளதாக சுராஜ் தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சுராஜ் கூறும்போது:-
ரசிகர்கள் பணம் கொடுத்து படம் பார்க்க வருகின்றனர். நடிகர்கள் சண்டைபோடவேண்டும், நடிகைகள் கவர்ச்சியாக வரவேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த கருத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமன்னா டைரக்டர் சுராஜுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை தமன்னாவும் இயக்குநர் சுராஜின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமன்னா தனது டிவிட்டர் பக்கத்தில்:-
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) December 26, 2016
நான் நடித்த கத்தி சண்டை பட இயக்குனர் சுராஜ் கூறிய கருத்துகளால் நான் வேதனையும், கோபமும் அடைந்துள்ளேன். அவர் என்னிடம் மட்டுமல்ல, இந்தத் துறையில் உள்ள அத்தனை பெண்களிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று விரும்புகிறேன். நாங்கள் நடிகர்கள், நடிப்பினால் ரசிகர்களை ரசிக்க வைக்கவே விரும்புகிறோம்.
இது 2016. பெண் முன்னேற்றம் குறித்து பேசும் டங்கல் போன்ற ஒரு படத்தின் காட்சியிலிருந்து பாதியில் வந்து இந்த விவகாரத்தை எதிர்கொள்கிறேன்.
11 வருடங்களாக தென்னிந்தியப் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு விருப்பமான உடைகளில் மட்டுமே நடித்துள்ளேன். சினிமா ரசிகர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தை வைத்து இந்தத் துறையை பொதுமைப்படுத்திவிடவேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.
இயக்குநர் சுராஜ், பெண்கள் குறித்து கூறிய கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், 'என்னை மன்னியுங்கள். தமன்னா உள்ளிட்ட அனைத்து கதாநாயகிகளும் என்னை மன்னிக்க வேண்டும்.
எனக்கு யாரைப் பற்றியும் தவறாக பேசி, அவர்கள் மனதை புண்படுத்தும் எண்ணம் இல்லை. மீண்டும் என்னை மன்னிக்கவும். என்னுடைய வார்த்தைகளை, நான் திரும்பப் பெறுகிறேன்' என சுராஜ் கூறியுள்ளார்.