புதிய ஆதார் அட்டை பெற.... திருத்தங்கள் செய்ய... சில எளிய வழிமுறைகள் குறித்த முழு விபரம்

ஆதார் கார்டு (Aadhaar Card) ஒவ்வொரு இந்தியரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான அடையாள சான்றாக உள்ளது. பான் கார்டு, வங்கி கணக்கு, டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற அனைத்து விதமான முக்கிய ஆவணங்களையும் ஆதார் அட்டையுடம் இணைக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 18, 2024, 01:35 PM IST
  • புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும்.
  • நேர விரயம் ஆவதை தடுக்க அப்பாயிண்ட்மெண்ட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
  • ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான UIDAI தொடர்ந்து வசதிகளை அதிகரித்து வருகிறது.
புதிய ஆதார் அட்டை பெற.... திருத்தங்கள் செய்ய... சில எளிய வழிமுறைகள் குறித்த முழு விபரம் title=

ஆதார் கார்டு (Aadhaar Card) ஒவ்வொரு இந்தியரும் வைத்திருக்க வேண்டிய முக்கியமான அடையாள சான்றாக உள்ளது. பான் கார்டு, வங்கி கணக்கு, டிரைவிங் லைன்சென்ஸ், பாஸ்போர்ட் போன்ற அனைத்து விதமான முக்கிய ஆவணங்களையும் ஆதார் அட்டையுடம் இணைக்க வேண்டும் என்ற விதியும் உள்ளது. புதிய ஆதார் அட்டையை பெற பதிவு செய்வதற்கு கூடுதல் அணுகுமுறை தேவைப்படுகிறது. புதிதாக ஆதார் அட்டை பெறும் போது டிஜிட்டல் முறையில் விண்ணப்பிக்க முடியாது என்றாலும் , இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவருக்கும் எளிதாக பெறும் வகையில், ஆதார் அட்டை வழங்கும் அமைப்பான UIDAI தொடர்ந்து வசதிகளை அதிகரித்து வருகிறது.

ஆன்லைனில் ஆதார் அட்டையை பெற முடியுமா?

டிஜிட்டல் முறையில், ஆதார் அட்டையை (Aadhaar Card) முழுவதுமாக ஆன்லைனில் பெற முடியாது. இருப்பினும், நீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருந்து, முதல் முறையாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், அதற்கான நடைமுறைகள் எளிதாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார் அட்டை பெறுவது எப்படி?

பதிவு மையத்திற்குச் செல்லவும்

புதிய ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க, அங்கீகரிக்கப்பட்ட ஆதார் பதிவு மையத்திற்கு நேரில் செல்ல வேண்டும். இந்த மையங்கள் நாடு முழுவதும் பரவி உள்ள இந்த மையங்களில், உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள மையம் எது என்பதை அதிகாரப்பூர்வ UIDAI இணையதளம் மூலம் எளிதாகக் கண்டறிய முடியும்.

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு.... ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசாங்க அறிவிப்பு எப்போது? அப்டேட் இதோ

அப்பாயிண்ட்மெண்ட்டை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்

நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை தவிர்க்க, UIDAI ஆனது ஆன்லைன் சந்திப்பு முன்பதிவு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. பதிவுசெய்தல் நேரில் செய்யப்பட வேண்டும் என்றாலும், நீங்கள் மையத்திற்கு வரும்போது உங்கள் பணியை கால தாமதம் இன்றி விரைவாக முடிப்பதை உறுதி செய்யும் வகையில், உங்களுக்கு ஏற்ற ஒரு வசதியான சந்திப்பு நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்யலாம்.

ஆவணங்கள் மற்றும் பயோமெட்ரிக்ஸ் தகவல்கள்

ஆதார் மையத்தில், அடையாள மற்றும் முகவரி சான்றுக்கான ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் பாஸ்போர்ட்கள், வாக்காளர் ஐடிகள், உங்கள் வீட்டுக்கான பில்கள் மற்றும் பலவும் அடங்கும். கூடுதலாக, உங்கள் பயோமெட்ரிக் தரவு - கைரேகைகள், கருவிழி ஸ்கேன் மற்றும் புகைப்படம் உட்பட தகவல்கள் உஙக்ளிடம் இருந்து சேகரிக்கப்படும்.

ஆதார் எண் உருவாக்கம்

உங்கள் பதிவு முடிந்ததும், உங்களுக்கான தனிப்பட்ட ஆதார் எண் உருவாக்கப்படும். UIDAI உங்கள் பதிவு செய்யப்பட்ட முகவரிக்கு ஆதார் அட்டையை அனுப்பும். உங்கள் ஆதார் தயாரானதும், யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து இ-ஆதார் எனப்படும் டிஜிட்டல் பதிப்பையும் பதிவிறக்கம் செய்யலாம்.

ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பித்தல் மற்றும் திருத்தங்கள் செய்தல்

உங்களிடம் ஏற்கனவே ஆதார் அட்டை இருந்தால், உங்கள் விவரங்களைப் புதுப்பிக்கவோ அல்லது திருத்தவோ விரும்பினால், அதிகாரப்பூர்வ UIDAI போர்டல் மூலம் ஆன்லைனில் எளிதாக மாற்றங்களைச் செய்யலாம்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News