Vijayakanth Unknown Facts : சம்பளம் வாங்காத நடிகர்..இயற்பெயர் வேறு..விஜயகாந்த் குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்!

DMDK Leader Captain Vijayakanth Unknown Facts : ரசிகர்களாலும் தொண்டர்களாலும் ‘கேப்டன்’ என்று அழைக்கப்பட்ட விஜயகாந்த், இன்று உடல்நலக்குறைவால் காலமானார். 

Written by - Yuvashree | Last Updated : Dec 28, 2023, 10:26 AM IST
  • நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் காலமானார்.
  • இவர் தான் நடித்த படங்களுக்காக சம்பளம் வாங்காமல் நடித்திருக்கிறார்.
  • விஜயகாந்த் குறித்து யாரும் அறியாத தகவல்கள்.
Vijayakanth Unknown Facts : சம்பளம் வாங்காத நடிகர்..இயற்பெயர் வேறு..விஜயகாந்த் குறித்து நீங்கள் அறியாத தகவல்கள்! title=

DMDK Leader Captain Vijayakanth Unknown Facts in Tamil :குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் முதல் பார்வையிலேயே கவர்ந்து இழுத்துவிடுவதில் வித்தகர் கேப்டன் விஜயகாந்த். கறுப்பு நிறம்,சிரித்த முகம், கம்பீர நடை, கணீர் குரல்..இந்த அடையாளங்களைச் சொல்லி “யார் இந்த நடிகர்?” என்றால் அனைவரும் சொல்லும் பெயர் விஜயகாந்த் என்பதுதான். 

பிறப்பும் நடிப்பும்..

தமிழகத்தையே தனது நடிப்பால் கட்டிப்போட்ட விஜயகாந்த், மதுரை மாவட்டம், திருமங்கலத்தில்பிறந்தவர். அழகர்சாமி என்ற ரைஸ்மில் முதலாளியின் மகனான இவர் படிப்பில் ஆர்வம் காட்டாமல், தொடக்கம் முதலே திரையரங்குக்கு சென்று எம்.ஜி.ஆர் படங்களை பார்ப்பதையே வழக்கமாக கொண்டவர்.  

அந்த சினிமா ஆர்வம் அவரை சென்னைக்கு அழைத்து வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு வந்தவரை அவரது நிறத்தை காட்டி பல தயாரிப்பாளர்கள் கேலி செய்து ரிஜக்ட் செய்துள்ளனர். ஆனால் விக்ரமாதித்தன் போல தனது முயற்சியை கைவிடாத விஜயகாந்த் 1979-ஆம் ஆண்டு எம். ஏ. காஜாவின் இயக்கத்தில் வெளியான இனிக்கும் இளமை திரைப்படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். 

விஜயகாந்த் பெயர் காரணம்..

‘விஜயராஜ்’ பெயர் என்ற பிடிக்காததால் இனிக்கும் இளமை பட இயக்குனர் விஜயகாந்த் என இவருக்கு பெயர் வைத்தாராம். விஜயகாந்த் சினிமாவுக்குள் நுழைந்த போது ரஜினிகாந்த் உச்சநடிகராக இருந்தாராம். அதனால் அவரது பெயரில் இருந்த காந்த்தை எடுத்து சேர்த்தாராம். 

நடித்த படங்கள்..

'சட்டம் ஒரு இருட்டறை', 'தூரத்து இடி முழக்கம்', 'அம்மன் கோவில் கிழக்காலே', 'உழவன் மகன்', 'சிவப்பு மல்லி' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உயர்ந்தார் விஜயகாந்த். 'வைதேகி காத்திருந்தாள்', 'உழவன் மகன்', 'கேப்டன் பிரபாகரன்','வானத்தைப் போல', 'தவசி', 'ரமணா', எங்கள் அண்ணா என இதுவரை 150 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஒரு ஹீரோவாக விஜயகாந்த், 1984 ஆம் ஆண்டு மட்டும்  18 திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தார். இந்த சாதனையை வேறந்த நடிகரும் செய்ததில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 24 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் இராம நாராயணன் ஆகிய இருவரும் தான் விஜயகாந்தை வைத்து அதிக எண்ணிக்கையிலான திரைப்படங்களை இயக்கியுள்ளாகள். இதில் பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட். 

சம்பளத்தில் வாங்காமல் நடித்தவர்...

விஜயகாந்த், தன்னை நடிக்க அழைத்தால், சம்பளம் குறித்து கவலைப்படவே மாட்டாராம். தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து வகை படங்களிலும் நடித்து விட்ட இவர், பல படங்களுக்கு சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்திருக்கிறாராம். சில படம் திரையரங்கில் ஓடி, வெற்றி பெற்ற பிறகு சம்பளத்தை பெற்றுள்ளாராம். அது மட்டுமன்றி, விஜயகாந்த் தனது நெருங்கிய நண்பர்கள் இயக்கிய/நடித்த சில படங்களில் கௌரவ தோற்றத்தில் தோன்றியுள்ளார். ஆனால், அந்த படங்களுக்காக அவர் சம்பளமே வாங்கியதில்லையாம். 

விஜயகாந்த்

சினிமாவிற்காக ஓயாது உழைத்தவர்..

சினிமாவிலேயே வளர்ந்து, சினிமாவிலேயே படித்து, சினிமாவிற்காகவே வாழ்ந்த நடிகர் விஜயகாந்த். இவர், படங்களில் நடிப்பதற்காக 3 ஷிஃப்டுகளில் வேலை பார்ப்பாராம். ஒரே நேரத்தில் பல படங்களில் கமிட் ஆனதால், 24 மணி நேரமும் இவருக்கு வேலைகள் இருந்து கொண்டே இருக்குமாம். அது மட்டுமன்றி, இவரால் ஒரு நாள் ஷூட்டிங் கூட தடைப்பட்டதில்லை என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 

பல நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர்..

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவை தூக்கி விடுவதற்கு உதவிய பல நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மன்சூர் அலிகான், சரத்குமார், அருண் பாண்டியன் உள்பட பல நடிகர்கள் அவரால் அறிமுகப்படுத்தப்பட்டனர். இவர்களுடன் தனிப்பட்ட வகையிலும் இவருக்கு நல்ல பழக்க வழக்கங்கள் உண்டு. 

100வது படத்தில் வெற்றிகண்டவர்..

விஜயகாந்த் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இவர், தனது 100வது படமாக ‘கேப்டன் பிரபாகரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தின் வெற்றியே அவரது ரசிகர் பட்டாளத்தை பறைசாற்றும் வகையில் இருந்தது. அது மட்டுமன்றி, இதுவரை தமிழ் சினிமாவிலேயே அதிக போலீஸ் அதிகாரி வேடங்களில் நடித்த ஒரே நடிகர் இவர் என்றும் கூறப்படுகிறது. 

கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 71வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இவரது இழப்பு, சினிமா துறைக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழகத்திற்கே பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News