கொரோனா தொற்று குறைந்து வருகிறது என்று நினைத்துக்கொண்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் தமிழக அரசின் உத்தரவின்படி, பொதுஇடங்களில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பாலம் ஆற்றங்கரை பகுதியில் நேற்று மாலை நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் (Don) படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு மேம்பாலம் பகுதியில் நடைபெற்றதால் நடிகர் சிவகார்த்திகேயனை (Sivakarthikeyan) காண்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றாமல் அங்கு படப்பிடிப்பை காண நின்றனர்.
ALSO READ: டாக்டர் ரிலீஸ் குறித்து வெளியான புதிய தகவல்; படக்குழு முக்கிய முடிவு
இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், படப்பிடிப்பு நடத்துபவர்கள் அவர்களின் வாகனங்களை மெயின் ரோடு பகுதியில் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் சமூக இடைவெளியின்றி குவிந்து நின்றதால், படப்பிடிப்பை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் அனுமதியின்றி அந்த பகுதியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து டான் படக்குழுவினருக்கு வருவாய்த்துறையினர் ரூ.19,400 அபராதம் விதித்தனர்.
ALSO READ: Hansika-வின் ‘மஹா’படத்துடைய தெறிக்கவிடும் திகில் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR