விரைவில் திருமணம்? விளக்கம் அளிக்கும் காஜல்!!

காஜல் அகர்வாலுக்கும், மும்பையில் உள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்ப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

Last Updated : Feb 28, 2018, 12:42 PM IST
விரைவில் திருமணம்? விளக்கம் அளிக்கும் காஜல்!! title=

காஜல் அகர்வாலுக்கும், மும்பையில் உள்ள தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்ப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

காஜல் அகர்வாலின் தங்கை நிஷால் அகர்வாலுக்கு 2013-ம் ஆண்டில் திருமணம் முடிந்து சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 

தற்போது காஜல் அகர்வாலுக்கும், மும்பையில் உள்ள இளம் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்ப்பட்டு உள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து காஜல் அகர்வால் கொடுத்த பதில்:- “நான் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரை காதலிப்பதாக தகவல் பரவி உள்ளது. அது தவறானது. தொழில் அதிபர் யாரையும் நான் காதலிக்கவில்லை. தற்போது நான் சினிமாவில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்துகிறேன்” என்றார்.

காஜல் அகர்வால் 2004-ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானார். இவர் சமீபத்தில் விவேகம், மெர்சல் படத்தில் நடித்து இருந்தார். தற்போது இவர் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்திலும், ‘எம்.எல்.ஏ’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

Trending News