கடந்த 10 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் ஜெயிலர் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் பேசினர்.
சன் பிக்சர்ஸ் தயாரித்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் ஜெயிலர். இசையமைப்பாளர் அனிருத்தின் பின்னணி இசையில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்து வருகிறது.
ஜெயிலர் பத்திரிகையாளர்கள் சந்திப்பு:
ஜெயிலர் படத்திற்கு மக்கள் அளித்த வரவேற்பிற்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் நெல்சன், நடிகர்கள் வசந்த் ரவி, சுனில், ஜாஃபர், கிங்ஸ்லி , பாடலாசிரியர் சூப்பர் சுப்பு, நடிகை மிர்னா மேனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வசந்த் ரவி..
ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த்தின் மகனாகவும் காவல் அதிகாரியின் கதாப்பாத்திரத்திலும் நடிகர் வசந்த் ரவி நடித்திருந்தார். இவர், இன்றைய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து காெண்ட போது ரஜினிகாந்த் குறித்த பல நெகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பின்வருமாறு பேசினார்…
“என்னுடைய கதாப்பாத்திரம் அடுத்து லெவலுக்கு போகும் என்று நெல்சன் சொன்னார். இப்போது அது நடந்திருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையில் ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். ஒவ்வொரு நடிகரும் படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடலாவது இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எனக்கும் அந்த மாதிரி தான். அதுவும் ரஜினி சாருடன் பாடல் கிடைக்கிறது என்பதையே பாக்கியமாக கருதுகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ரஜினிகாந்துடன் ஸ்கிரீனில் ஒரு சீன் கிடைத்தாலே பெரிய விஷயம் என்று நினைத்தேன். அந்த கனவு எல்லா நடிகர்களுக்கும் இருக்கும் என்றார். மேலும் தனக்கு அந்த கனவு நிறைவேறியுள்ளதாகவும் மகனாக ரஜினிகாந்த் சாருடன் நடித்தது எனக்கு ஆசிர்வாதம் தான் என்றும் கூறினார். ஜெயிலர் ஷூட்டிங்கின் போது ஒவ்வொரு நாளும் ரஜினி சாரிடம் இருந்து என்ன கற்றுக் கொள்ள போகிறோம் என்ற ஆவல் இருந்ததாக அவர் கூறியிருக்கிறார்.
“அப்பா மாதிரி..”
வசந்த ரவி பேசுகையில், “படத்தின் இறுதி நாள் ஷீட்டிங்கில், ரஜினி சாரிடம், மிஸ் யூ சார் என்று சொன்னதற்கு, அவரும் மிஸ் யூ சோ மச் என்று சொன்னார். நான் அவரை எனது அப்பாவாக தான் பார்க்கிறேன். நாம் இருவரும் இணைந்து அடுத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று நான் சொன்னதை ரஜினிகாந்த் சாரும் ஏற்று கொண்டார். ரஜினிகாந்த் சாருக்கு ரொம்ப நன்றி” என தெரிவித்தார்.
வசந்த் ரவியை தொடர்ந்து படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமாரும் பேசினார். அப்போது, “இந்த படம் துவங்கும் போது இவ்வளவு பெரிய ஹீட் ஆகும் என்று நினைக்கவில்லை” என்று கூறினார். இந்த படத்தின் வெற்றிக்கு படத்தின் கதை & ரஜினிகாந்த் சாரின் ஒத்துழைப்பு காரணம் என்றும் படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “எனக்கு படம் நல்லா வரும். ஆனால் இந்த அளவுக்கு வரும் என நினைக்கவில்லை. இந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் ரஜினிகாந்த் சார் தான். நிறைய பேர் நம்மை, படம் சரியாக வருமா என்று யோசிக்கும் போது, படத்துக்கு முக்கிய புள்ளி, ஸ்டாட்டப் ( ரஜினிகாந்த்) அவர் தன் இமேஜை ஒதுக்கி வைத்து விட்டு, நாம் சொல்வதை கேட்டு சீனில் ஆர்வத்தோடு பங்கேற்று இந்த படம் இவ்வளவு தூரம் வந்ததற்கு காரணம் அவர் தான். ரொம்ப நன்றி சார்” என்று கூறினார்.
மேலும் படிக்க | தலைவர் 170 படத்தில் இணைந்த பிரபல நடிகர்..! ரசிகர்கள் உற்சாகம்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ