Pranav Mohanlal: மலையாள திரையுலகின் பிரபல நடிகரான மோகன்லாலுக்கு பிரணவ் என்ற மகன் உள்ளார். மலையாளத்தில் வெளியான சில படங்களில் அவர் நடித்துள்ளார். இதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துள்ளார். ஆனால் தற்போது அவர் ஸ்பெயினில் உள்ள பண்ணையில் வேலை பார்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவரது தாய் சுசித்ரா ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், என் மகன் அப்பு (பிரணவ்) தற்போது ஸ்பெயினில் உள்ள ஒரு பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். ஸ்பெயினில் சம்பளம் வாங்காமல் விவசாயம் செய்து வருவதாகவும், உணவு மற்றும் இருப்பிடத்திற்காக வேலை செய்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | அமரன் படத்தால் எழுந்த புதிய சர்ச்சை! இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சொன்ன பதில்!
ஒரு நேர்காணலில் பேசிய சுசித்ரா, "தனது மகன் அப்பு தற்போது ஸ்பெயினில் ஒரு பண்ணையில் வேலை செய்கிறார். அங்கு அவர் பணம் சம்பாதிக்கவில்லை, உணவு மற்றும் இருப்பிடத்திற்காக பண்ணையில் வேலை செய்து வருகிறார். சில நேரங்களில் குதிரைகள் மற்றும் ஆட்டுக்குட்டிகளை கவனித்துக்கொள்ள உதவுகிறார். அவர் வீடு திரும்பும்போது தனது சாகசங்களை பற்றிய கதைகளைப் எங்களுடன் பகிர்ந்து கொள்வார்" என்று குறிப்பிட்டுள்ளார். தனது மகன் வருடத்திற்கு 2 படங்கள் நடிக்க வேண்டும் என்று சுசித்திரா எதிர்பார்க்கிறார். "அப்பு ஒரு ஆண்டில் 2 படங்கள் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் அவரது யோசனை வேறு வடிவில் உள்ளது. அவர் ஒவ்வொரு விஷயங்களும் பார்த்து பார்த்து செய்கிறார். தற்போது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற திட்டத்தை வைத்துள்ளார். எனக்கு கதை கேட்க பிடிக்கும். அதனால் அப்புவிற்காக கதைகளை கேட்டு வைத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
பிரணவ் மோகன்லால் 2015ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். இது அவரது தந்தை நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். அவர் குழந்தையாக இருந்தபோது 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளின் அப்பாவின் ஒன்னமன் மற்றும் புனர்ஜனி ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். பின்னர், அவர் 2018ல் ஆதி என்ற திரைப்படத்திலும், 2022ல் ஹ்ருதயம் என்ற திரைப்படத்திலும் நடித்து மிகவும் பிரபலமானார். அவரது சமீபத்திய திரைப்படமான வர்ஷங்களுக்கு ஷேஷம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. பிரணவின் தாயார் சுஷிதா, தனது மகனும், கணவரும் ஒரே படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் இருவரது நடிப்பையும் ஒப்பிட்டு பார்த்து கருத்து கூறுவார்கள், அதில் எனக்கும் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ