National Film Awards 2022: 68-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தமிழில் சிறந்த திரைப்படமாக சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரறைப்போற்று’ திரைப்படம் தேர்வாகியுள்ளது. அந்தப் படம் மட்டும் சுமார் 5 விருதுகளை அள்ளி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த நடிகையாக சூரறைப் போற்று திரைப்படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைக்கதைக்காக இயக்குநர் சுதா கொங்கராவுக்கும், பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷூக்கும் தேசிய விருது கிடைத்துள்ளது.
மேலும் படிக்க | ’ஜெயிச்சிட்டோம் மாறா’ 5 தேசிய விருதுகளை வென்ற சூரறைப் போற்று
இதுதவிர யோகிபாபு நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘மண்டேலா’ படத்திற்கும் திரைக்கதைக்கான விருது கிடைத்துள்ளது. இசையமைப்பாளர் தமனுக்கு தெலுங்கு படத்திற்கு இசையமைத்தற்காக தேசிய விருது கிடைத்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஒரே ஒரு பிரிவுக்கு மட்டும் தேசிய விருது அறிவிக்கப்படவில்லை. எப்போதும் சிறந்த சினிமா விமர்சகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்படுவது உண்டு. சினிமாவை தரமாக விமர்சிக்கும் விமர்சகர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு தேசிய விருது கொடுக்கப்படுவதுண்டு.
ஆனால், இந்த ஆண்டு சிறந்த சினிமா விமர்சகர்கள் பிரிவில் யாருக்கும் விருது அறிவிக்கப்படவில்லை. சிறந்த சினிமா விமர்கர் யாராக இருக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த விருதுக்கு ஜூரி யாரையும் தேர்வு செய்யவில்லை. 68வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில், சிறந்த சினிமா விமர்சகர் என்ற பக்கத்துக்கு நேராக ‘நோ வின்னர் திஸ் இயர்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் இந்த ஆண்டில் தரமான சினிமா விமர்சகர் கவுரவம் யாருக்கும் கிடைக்கவில்லை.
மேலும் படிக்க | ரொம்ப பெருமையா இருக்கு - விருதுகளை அள்ளிய சூரறைப் போற்றுக்கு தனுஷ் வாழ்த்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ