இளையதளபதி நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை நிறைவு செய்துள்ளார். இந்தப் படத்துக்குப் பிறகு தளபதி 66 பணிகளை தொடங்க உள்ளார். அந்தப் படத்தை பிரபல இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்குகிறார். அவர் ஏற்கனவே தமிழில் தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். விஜய் - வம்சி கூட்டணியில் உருவாகும் தளபதி 66 படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ALSO READ | மாஸ் காட்டும் சூர்யா..! 5 மொழிகளில் வெளியாகும் ’எதற்கும் துணிந்தவன்’
இந்தப் படத்தில் பிரபுதேவா நடன இயக்குநராக பணியாற்ற உள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், இது குறித்து பிரபுதேவாவிடம் நேரடியாக கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் வதந்தி (Rumour) என பதிலளித்தார். பிரபுதேவா முதன்முதலாக இயக்குநராக அறிமுகமான முதல் படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் போக்கிரி. திரையிடப்பட்ட அனைத்து இடங்களிலும் வசூலை அள்ளிய இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனையடுத்து இருவரும் ’வில்லு’ படத்தில் ஜோடி சேர்ந்தனர். விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவும், காமெடியனாக வடிவேலும் நடித்தனர்.
அதன்பிறகு அக்ஷயக்குமார் நடிப்பில் இந்தியில் வெளியான ரவுடிரத்தோர் திரைப்படத்தை பிரபுதேவா இயக்கினார். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் ஒரு பாடலுக்கு நடனமாடினார். இதன்பின்னர், பிரபுதேவா - விஜய் கூட்டணி சேரவில்லை. தளபதில் 66 படத்தில் 2 பாடல்களுக்கு நடன இயக்குநராக பணியாற்று வருமாறு பிரபுதேவாவிடம் விஜய் கேட்டுக்கொண்டதாக தகவல் பரவியது. அந்த தகவல் வெறும் வதந்தி எனக்கூறி பிரபுதேவா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Also Read | வித்தியாசமான பரிமாணங்களில் நடிக்க ஆர்வம் காட்டும் பூமிகா சாவ்லா!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR