Premalu Tamil Dub Release Date: தமிழ் சினிமா உலகிலும், தமிழ்நாட்டிலும் கடந்த சில நாள்களாகவே ஹாட் டாப்பிக் மஞ்சும்மல் பாய்ஸ்தான். மலையாள திரைப்படம் என்றாலும், தமிழர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திலும் மக்கள் குடும்பத்தோடு வந்து திரையரங்கில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை பார்க்கின்றனர்.
மஞ்சும்மால் பாய்ஸின் வெற்றி
கொடைக்கானல், 'குணா' திரைப்படம் சார்ந்த காட்சிகள் மற்றும் உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மிக நெருக்கமான ஒன்றாகி உள்ளது எனலாம். சமீப காலமாக தமிழ் சினிமாவே பெரியளவில் வசூலை குவிக்காத நிலையில், மஞ்சும்மல் பாய்ஸின் வெற்றி கோடம்பாக்கத்தையே அசைத்து பார்த்துள்ளது எனலாம்.
ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடித் தீர்த்தாலும், படத்தின் எழுத்து, இயக்கம் என்பது சுமாராகவே இருப்பதாகவும் விமர்சனங்களை ஆங்காங்கே பார்க்க முடிந்தது. குறிப்பாக, மஞ்சும்மால் பாய்ஸ் படத்தின் கதாபாத்திரங்களை குடிப்பொறுக்கிகள் எனவும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் சமீபத்தில் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கழுவி ஊற்றிய ஜெயமோகன்! விமர்சனமா? வன்மமா?
பிரம்மயுகமும், பிரேமலுவும்...
இது ஒருபுறம் இருக்க, மலையாள சினிமாவின் காட்டில் மழைதான் எனலாம். மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரம்மயுகம், பிரேமலு ஆகிய படங்கள் வசூல் ரீதியாக ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக பிரேமலு படத்தில் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது எனலாம். மலையாளத்தில் தண்ணீர் மத்தான் தினங்கள், சூப்பர் சரண்யா ஆகிய திரைப்படங்களை இயக்கிய கிரீஷ் A.D என்பவரின் மூன்றாவது திரைப்படம்தான் பிரேமலு.
முதலிரண்டு படங்களும் பதின் பருவத்தினர் மற்றும் கல்லூரி பருவத்தினரின் காதலை வைத்து வித்தியாசமான கதையம்சத்தில் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல்தான், பிரமலு திரைப்படம் கல்லூரி பருவ காதல் அதை சுற்றிய கதையம்சத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படம் இளைஞர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரிடம் சென்றடைந்து வசூலையும் குவித்தது.
தமிழிலும் வரவேற்பு
கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸான பிரேமலு திரைப்படம், மஞ்சும்மல் பாய்ஸ் வருவதற்கு முன் தமிழ்நாட்டிலும் நன்றாக ஓடிக்கொண்டிருந்தது. தமிழக மல்டிபிளக்ஸ்களில் நல்ல வருமானம் பார்த்த பிரேமலு சென்னையில் இப்போது வரை ஓடிக்கொண்டிருக்கிறது என்றால் அதன் வெற்றியை நீங்கள் புரிந்துகொள்ளலாம். அந்த வகையில், பிரேமலு படம் எப்போது ஓடிடியில் வரும் என தமிழ், மலையாள ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது.
பிரேமலு தமிழ் டப்: ரிலீஸ் தேதி?
மலையாளம் மற்றும் தமிழில் நல்ல வரவேற்பு இருப்பதால் திரையரங்கில் இன்னும் சில நாள்கள் இத்திரைப்படம் ஓடும் எனலாம். இந்நிலையில், பிரேமலு திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து வரும் மார்ச் 15ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும், அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இத்திரைப்படத்தில் நடித்த மமிதா பைஜூ தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பாலா சார் அப்படி எதுவுமே செய்யவில்லை.. நடிகை மமிதா பைஜூ விளக்கம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ