ரஜினிகாந்த் - ஷங்கர் இடையே ஏற்படப்போகும் மிகப்பெரிய மோதல்!

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை 2023ம் ஆண்டு ஏப்ரல்-14ம் தேதி திரையரங்குகளில் வெளியிட தயாரிப்பு குழு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Oct 23, 2022, 09:35 AM IST
  • ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
  • அடுத்த ஆண்டு படத்தை வெளியிட திட்டம்.
  • 60% பணிகள் நிறைவு அடைந்ததாக தகவல்.
ரஜினிகாந்த் - ஷங்கர் இடையே ஏற்படப்போகும் மிகப்பெரிய மோதல்! title=

திரையுலகின் முக்கியமான இரு முக்கியமான பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஷங்கர், இந்த இருவரின் கூட்டணியில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தது.  சூப்பர் ஸ்டார் படங்கள் என்றாலே ரசிகர்களிடம் எவ்வளவு உற்சாக வரவேற்பு  இருக்குமோ அதேபோல தான் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படங்களுக்கு ரசிகர்களிடையே உற்சாக வரவேற்பு இருக்கும், அதிலும் இந்த இருவரின் காம்போவில் உருவாகும் படம் என்றால் சொல்லவே தேவையில்லை அளவுகடந்த எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருப்பார்கள்.  தற்போது ஷங்கர் புகழ்பெற்ற பான்-இந்திய இயக்குனராக உயர்ந்துவிட்டார், ஷங்கர்-ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான படங்கள் நல்ல வசூலையும் ஈட்டியுள்ளது. இன்றுவரை அதிக வசூல் செய்த படங்களில் இவர்களது கூட்டணியில் வெளியான படங்களும் இடம்பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | 23 வயது பெண்ணை மணக்கிறேனா?... 56 வயதாகும் பப்லு விளக்கம்

ஷங்கர்-ரஜினிகாந்த் கூட்டணியில் வெளியான சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் ஹிட்டடித்தது.  தற்போது இவர்கள் கூட்டணி இணையவில்லை, இருவரும் வெவ்வேறு படத்தின் பணிகளில் பிசியாக இருந்து வருகின்றனர்.  நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கிட்டத்தட்ட 60% முடிவடைந்துவிட்டதாக தகவல்களும் வெளியாகியுள்ளது, இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  அடுத்ததாக இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசனை வைத்து இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகிறார், மறுபுறம் ராம் சரணை வைத்து 'ஆர்சி15' படத்தையும் ஷங்கர் இயக்கி வருகிறார், இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் ஷங்கரின் படமும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படமும் பாக்ஸ் ஆபிசில் மோதப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  தற்போது வெளியான தகவலின்படி ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் 'ஆர்சி15' படத்தை தயாரிப்பு குழு 2023ம் ஆண்டு ஏப்ரல்-13ம் தேதியன்று வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், மறுபுறம் சூப்பர் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தை தயாரிப்பு குழு 2023ம் ஆண்டு ஏப்ரல்-14ம் தேதியன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  தகவல் உண்மையாகும்பட்சத்தில் இந்த இரு படங்களும் ஒரே சமயத்தில் வெளியானால் போட்டி அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News