முதலில் மகளுக்கு; ரஜினியை அடுத்தடுத்து இயக்கும் இளம் இயக்குநர்கள் - புதிய அப்டேட்

ரஜினியின் அடுத்தடுத்த படங்களை இளம் இயக்குநர்கள் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Oct 7, 2022, 03:13 PM IST
  • ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் நடித்துவருகிறார்
  • அடுத்ததாக சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்கலாம் என தகவல்
  • இதற்கிடையே தனது மகள் இயக்கத்திலும் நடிப்பார் என பேசப்படுகிறது
 முதலில் மகளுக்கு; ரஜினியை அடுத்தடுத்து இயக்கும் இளம் இயக்குநர்கள் - புதிய அப்டேட் title=

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. இதனால் அப்செட்டான ரஜினி டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். டாக்ட்சர் வெற்றியை நெல்சனுடன் ரஜினி இணைந்ததை கொண்டாடிய ரசிகர்கள் பீஸ்ட் பட தோல்வியை வைத்து கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்தச் சூழலில் ரஜினி படத்திலிருந்து நெல்சன் நீக்கப்பட்டுவிட்டார் என்றெல்லாம் செய்திகள் பரவின. ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கும் விதமாக ரஜினி - நெல்சன் இணையும் படத்துக்கு ஜெயிலர் என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியது.

மேலும் சென்னையில் சமீபத்தில் ஷூட்டிங்கும் தொடங்கியது. இதில் ரஜினி நடிக்கும்ம் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது அதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள்மோகன் உள்ளிட்டோர் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

 

இந்தச் சூழலில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற பேச்சு எழுந்த நிலையில் ’டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி பெயரை ரஜினி டிக் அடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. டான் படத்தை பார்த்த ரஜினி அதன் மேக்கிங்கிலும், எமோஷனிலும் இம்ப்ரெஸ் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sibi

அதேபோல் ரஜினி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கலாம் என தெரிகிறது.அதேசமயம், தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிக்கும் திட்டத்திலும் இருக்கிறாராம். இப்படி 
இளம் இயக்குநர்களுக்கு தொடர்ந்து பணியாற்றவிருக்கும் ரஜினி நெல்சன் படத்தை முடித்துவிட்டு ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் முதலில் நடிக்க வாய்ப்புகள் அதிகம் என கோலிவுட்டில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

மேலும் படிக்க | நானே வருவேன் கதை தனுஷ் எழுதியதா? உண்மையை கூறிய செல்வராகவன்!

மேலும், தனுஷுடனான விவகாரத்திலிருந்து ஐஸ்வர்யாவின் கவனம் திரும்ப்வுவதற்கும் இது ஒரு வாய்ப்பாக இருக்குமென அவர் கருதுவுதாக போயஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்ற்னா.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News