Rajinikanth Yogi Adityanath Meeting: ரஜினிகாந்த் தனது சமீபத்திய பிளாக்பஸ்டர் 'ஜெயிலர்' படத்தை முன்னிட்டு இமயமலை உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதில், தற்போது அவர் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ளார்.
அந்த வகையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை, ரஜினிகாந்த நேற்று சந்தித்தார். முன்னதாக ரஜினிகாந்த் லக்னோவிற்கு வருவதற்கு முன் கொடுத்த பேட்டியில், "நான் முதல்வருடன் (யோகி ஆதித்யநாத்) படம் பார்ப்பேன். படம் வெற்றி பெற்றது கடவுளின் ஆசீர்வாதம்" என கூறியிருந்தார். இருப்பினும், லக்னோவில் நடந்த 'ஜெயிலர்' படத்தின் சிறப்புக் காட்சியில் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா கலந்துகொண்டார்.
“எனக்கும் 'ஜெயிலர்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் ரஜினிகாந்தின் பல படங்களைப் பார்த்திருக்கிறேன், அவர் ஒரு திறமையான நடிகர், படத்தில் அதிக உள்ளடக்கம் இல்லாவிட்டாலும், அவர் தனது நடிப்பால் படத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கிறார்" என்று துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கருத்து தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் ரஜினிகாந்த், உத்தர பிரதேச கவர்னர் ஆனந்திபென் படேலை ராஜ்பவனில் சந்தித்தார்.
மேலும் படிக்க | கேரளாவில் மாஸ் காட்டும் ரஜினி.. விக்ரம் பட வசூலை மிஞ்சிய ஜெயிலர்
நடிகர் ரஜினிகாந்த் இன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலுக்கு வருகை தர உள்ளார். உத்தர பிரதேசத்திற்கு செல்வதற்கு முன், ரஜினிகாந்த் ஜார்கண்ட் மாநிலத்தில் தங்கியிருந்தார். மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சின்னமஸ்தா கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 18) சென்று நேர்த்திக்கடன் செலுத்தினார். ராஞ்சியில் உள்ள 'யாகோட ஆசிரமத்தில்' ஒரு மணி நேரம் தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணனை ராஜ்பவனில் சந்தித்துப் பேசினார்.
இதில், நேற்று ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத்தை பார்த்த உடன் அவரின் காலில் விழுந்து வணங்கினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
72 வயதான ரஜினிகாந்த், 51 வயதான யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்தது முறையல்ல என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், யோகி ஆதித்யநாத் மீதான மரியாதையின் நிமித்தம் ரஜினி இந்த செயலை செய்ததாக அவரின் ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, ரஜினி யோகி ஆதித்யநாத்தின் காலில் விழந்தது வைரலாகி வருகிறது. அதுகுறித்து நெட்டிசன்கள் பகிர்ந்த சில கருத்துகளை இங்கு காணலாம்.
That’s how you respect Hindu monk. The fact to be noted is Yogi Adhyanath is younger than Rajinikanth. Need to learn alot from Guru Rajin#Rajinikanth #YogiAdityanath #Jailer pic.twitter.com/6dcVnyxUbG
— Tharun(@officialtharun_) August 19, 2023
#YogiAdityanath - 51 - Politician#Rajinikanth - 72 - Actor
Cover drive : Yogi is a Monk, nothing wrong in touching his feet.pic.twitter.com/F5FMH10j4c
— The Dark Knight (@In_DarkKnight) August 19, 2023
How a 72 years old man touching feet of 51 yrs old man?? Is this culture thing or power thing?#YogiAdityanath pic.twitter.com/XRDYKDCCTy
— Tarique Hasan Tofi (@tariquespeaks) August 19, 2023
நெல்ஸன்: சம்பவம் மட்டும் ஒரு வாரத்துக்கு முன்னாடி நடந்திருந்தா… pic.twitter.com/joizzvvWP5
— MooknayakDr (@sathisshzdoc) August 19, 2023
Irreparable damage to the image of Super star
— MooknayakDr (@sathisshzdoc) August 19, 2023
Thalaivar ~ enaku edhiringa veliya illada...enaku nandan edhiri https://t.co/qvGI3ll6II
— Naveen Raaj (@naveenversion96) August 19, 2023
ரஜினி நடிப்பில் கடந்த ஆக. 10ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இப்படத்தில், ரஜினியுடன் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.குறிப்பாக, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நட்சத்திரம் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் கேமியா கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளனர். அனிருத்தின் இசை படத்தை தூக்கி நிறுத்துவதாகவும் கூறப்படுகிறது. பீஸ்ட் படத்தின் பின்னடவை அடுத்து நெல்சனுக்கும், அண்ணாத்தா படத்தின் விமர்சனத்திற்கு பின் ரஜினிக்கும் ஜெயிலர் திரைப்படம் பெரும் கொடையை அளித்துள்ளது எனலாம்.
மேலும் படிக்க | 500 கோடியை நெருங்கும் ஜெயிலர்..! முழு பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதுதான்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ