‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ பாடல் நாளை வெளியீடு!

Last Updated : Aug 29, 2017, 10:50 AM IST
‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ பாடல் நாளை வெளியீடு! title=

நடிகர் ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பலூன்'. 

தமிழகத்தில் உள்ள பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்புடன் விவாதம் எழுந்தபோது, ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’ என்று நடிகை ஓவியா கூறியது மிகவும் பிரபலமானது. 

ஓவியா கூறிய சொற்களை பயன்படுத்தி பாடல் அமைக்கப்போவதாக பலூன் திரைப்படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்து இருந்தனர்.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா இசையில் உருவாகி உள்ள இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் பாடியுள்ளார். 

'நீங்க ஷட் அப் பண்ணுங்க' பாடலின் சிங்கிள் டிராக் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற படக்குழு தெரவித்துள்ளனர்.

Trending News