நானி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை... உற்சாகத்தில் ரசிகர்கள்

நானி, சாய் பல்லவி நடித்திருந்த ஷியாம் சிங்கா ராய் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 18, 2022, 04:06 PM IST
  • ஷ்யாம் சிங்கா ராய் படம் கடந்தாண்டு வெளியானது
  • படத்தில் நானி நடித்திருந்தார்
  • நானிக்கு ஜோடியாக சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தனர்
 நானி படம் ஆஸ்கருக்கு பரிந்துரை... உற்சாகத்தில் ரசிகர்கள் title=

தெலுங்கில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நானி நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் உருவான திரைப்படம் "ஷியாம் சிங்கா ராய்". நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் போயனபள்ளி தயாரித்திருந்த இப்படத்தை, இயக்குநர் ராகுல் சன்கிரித்யன் இயக்கினார். மறுபிறவியை மையமாக கொண்டு உருவான இப்படத்தில், நானி இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். சாய்பல்லவி, கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவான இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் படத்தில் பேசப்பட்டிருந்த தேவதாசி முறை, சாதிக்கு எதிரான வசனங்கள் என்று படம் அனைவரது கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமின்றி இதுபோன்ற படங்களும், வசனங்களும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இன்னும் அதிகம் வரவேண்டுமென்றும் பலர் கூறினர்.

Nani

இந்நிலையில் "ஷியாம் சிங்கா ராய்" திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறந்த காலகட்டத் திரைப்படம், சிறந்த பின்னணி இசை, பாரம்பரிய கலாச்சார நடனம் ஆகிய மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவும், நானியின் ரசிகர்களும் உற்சாகமாக இருக்கின்றனர். மேலும் ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டுமென்று பலரும் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் நானி தெலுங்கில் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழில் இதுவரை அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படங்கள் அமையவில்லை. ராஜமௌலி இயக்கிய நான் ஈ படம் தமிழில் ஹிட்டடித்தாலும் நானியின் கொடி தமிழ்நாட்டில் பறக்கவில்லை. சமீபத்தில் அவரும், நஸ்ரியாவும் நடித்த அடடே சுந்தரா படம்கூட தமிழில் வெளியானது. 

மேலும் படிக்க | திருச்சிற்றம்பலம் - நீண்ட நாள்கள் கழித்து ஒரு ஃபீல் குட் படம்

ஆனால் அந்தப் படமும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சமீபத்தில் சென்னை வந்திருந்த நானி, கமல் ஹாசன் படங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். தமிழில் நடிக்க வேண்டுமென்று எனக்கு நீண்ட நாள் ஆசை. விரைவில் நேரடி தமிழ் படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ‘சோழா சோழா’ - பொன்னியின் செல்வனின் புதிய அப்டேட்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News