Why You Should Never Take Loans | கடன் சுமையால் ஒரு குடும்பமே விஷம் குடித்து தற்கொலை, ஒருவர் தூக்கிட்டு தற்கொலை என்ற செய்திகளை அடிக்கடி செய்தித்தாள், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஆனால், இந்த செய்திகளுக்கு பின்னால் இருக்கும் காரண காரணிகள் குறித்து ஒருபோதும் அலசி ஆராய்ந்திருக்க மாட்டீர்கள். உண்மையில், இந்த செய்திகள் தான் உங்கள் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான பாடம். ஆம், கடன் எனும் பூதம் எவ்வளவு ஆபத்தானது என்பதை பூதக்கண்ணாடி போட்டு புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான வாழ்க்கை பாடம். உற்றார், உறவினர் என எல்லோரும் கடன் வலையில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை நீங்கள் தினம்தோறும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். ஏன்? நீங்களே கூட கடன் எனும் வலையில் சிக்கியிருக்க வாய்ப்புகள் உண்டு. ஆனால், அதில் இருந்து மீள தான் வழியை தேடிக் கொண்டிருப்பீர்கள். அதற்கு முதலில் கடன் எப்படியெல்லாம் வருகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
கடன் வருவதற்கான காரணங்கள்
கடன் இரண்டு வழிகளில் வரும். கல்வி, சொந்த வீடு, மருத்துவ செலவு, திருமண செலவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு போதுமான பணம் இல்லாதபோது கடன் வாங்க வேண்டியிருக்கும். இன்னொன்று, பணம் இல்லாத நேரத்தில் கடன் வாங்கிய பணத்தில் சொந்த வீட்டை ஆடம்பரமாக கட்டினால் கடன் சுமை அதிகமாகும். அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு கடன் வாங்கி அதனை நிறைவேற்றும்போது கடன் சுமை அதிகரிக்கும். ஒரு தொலைக்காட்சி இருக்கும்போதே புதிய தொலைக்காட்சி, வாகனங்கள், துணிகள் வாங்குவது. பண நெருக்கடி இருக்கும்போது அடிக்கடி ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுவது போன்ற அநாவசிய செலவுகள் காரணமாக கடன் அதிகரிக்கும். தொழில் தொடங்கி நட்டத்தில் செல்லும்போது கடன் சுமை அதிகரிக்கும்.
கடன் சுமை ஏற்படுத்தும் பிரச்சனைகள்
கடன் என்ற ஒன்று வந்துவிட்டாலே குடும்பத்தில் நிம்மதி போய்விடும். மனைவி, குழந்தைகள் என எல்லோரிடமும் சண்டை போட வேண்டியிருக்கும். அத்தியாவசிய தேவைகளை கூட தேவையான நேரத்தில் செய்து கொள்ள முடியாது. விருப்பும் ஊருக்கு போக முடியாது, திருவிழா, விருந்து என எதிலும் கலந்து கொள்ள முடியாமல் கடனுக்காக தினமும் உழைக்க வேண்டும் என வேலை வேலை என ஓடிக் கொண்டே இருக்க நேரிடும். இதனால் நிம்மதி போகும், ஆரோக்கியம் இழப்பீர்கள், வாழ்க்கையின் சந்தோஷமான பக்கங்களை தொலைத்திருப்பீர்கள். சுற்றுலா என்ற ஒன்றே உங்களுடைய அகராதியில் இருந்து அழிந்து போய் இருக்கும்.
மேலும் படிக்க | IRCTC வழங்கும் பிளாக் ப்ரைடே ஆஃபர்... விமான டிக்கெட்டுகளுக்கு அதிரடி சலுகை
இதுதவிர உங்களுக்கு கடன் அதிகமாக இருக்கிறது என்றால் உற்றார் உறவினர்கள் யாரும் மதிக்க மாட்டார்கள், தேவைக்கு உதவி செய்யகூட முன் வரமாட்டார்கள். ஏனென்றால் கொடுத்த பணத்தை உங்களால் திருப்பி தர முடியாது என அவர்களே முடிவு செய்து கொள்வார்கள். பணம் ஏதும் கேட்பீர்களோ என நெருங்கி கூட பழகமாட்டார்கள். வீட்டில் ஒரு வேலை உணவு கூட நிம்மதியாக சாப்பிட முடியாது. உங்களுக்கு கடன் இல்லை என்றால் கடன் சுமையால் அவதிப்படும் குடும்பங்களை நெருக்கமாக இருந்து பார்த்தால் இந்த அவஸ்தைகளை எல்லாம் காண முடியும்.
கடனை அடைக்க வழிகள்
வருமானம் வரும் வழியை ஏற்படுத்திக் கொண்டால் கடனை அடைத்துவிடலாம். ஆனால் உங்களுக்கு இருக்கும் கடன் தொகையை பொறுத்து திரும்ப செலுத்தும் காலம் தீர்மானமாகும். முதலில் அதிக வட்டியுள்ள கடனை கட்டுங்கள். சிறிய வட்டிக்கு வாங்கி பெரிய வட்டியுள்ள கடனை அடைத்துவிடுங்கள். சிறிய வட்டியுள்ள கடனுக்கான வட்டியை கட்டிக் கொண்டு, புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன் மூலம் கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள். கடனை அடைத்துவிடலாம். ஒருவேளை கடன் மீறியிருந்தால் உங்களிடம் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்து அடைத்துவிடுங்கள். கடனை வளர்க்காதீர்கள்.
மேலும் படிக்க | வெளிநாட்டினர் விரும்பி சுற்றி பார்க்கும் 7 இந்திய மாநிலங்கள்! டாப்பில் நம்ம ஊர்...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ