Squid Game 2 Review Tamil : கொரியன் தொடர்களை, இந்தியர்கள் அதிகம் பார்க்க ஆரம்பித்ததற்கு அடித்தளமாக அமைந்த தொடர் ஸ்குவிட் கேம். 2021ஆம் ஆண்டு இந்த தொடரின் முதல் சீசன் வெளியானது. இதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 26ஆம் தேதி இரண்டாவது சீசன் வெளியானது.
ஸ்குவிட் கேம் 2:
முதல் சீசனில், தனக்கு கிடைத்த பணத்துடன் புதிய வாழ்வை தொடங்க நினைத்த நாயகன் கிகி ஹன் (Seong Gi-hun), தன்னை போல இன்னொருவர் மாட்ட இருப்பதை பார்த்து, மனம் மாறுகிறார். இந்த விளையாட்டு போட்டிகளை நடத்துபவர்களை அழிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் இவர், அதற்காக தனக்கு கிடைத்த பரிசுத்தொகையை வைத்தே பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். 3 வருடங்களுக்கு பிறகு அந்த விளையாட்டு வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஆளை கண்டு பிடித்து எப்படியோ மீண்டும் விளையாட்டு பாேட்டிக்குள் நுழைகிறார். இதன் பிறகு என்ன நடந்தது? இந்த போட்டியில் ஈடுபட்ட விளையாட்டு வீரர்களை அவர் காப்பாற்றினாரா? என்பது மீது கதையாக வருகிறது.
முதல் சீசன் அளவிற்கு இல்லையோ?
ஸ்குவிட் கேம் 2 தொடரின் முதல் எபிசோடை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து தோன்றிய ஒரே விஷயம், “இது முதல் சீசன் அளவிற்கு இல்லையோ?” என்பதுதான். காரணம், முதல் சீசனில் அடுத்தடுத்த நிமிடங்களுக்கு காட்சிகள் எப்படி நகர்கிறது என்றே தெரியாது. முதல் சீசனில் முதல் எபிசோடில், இவர்கள் விளையாடப்போகும் விளையாட்டு அவர்களின் உயிரை பறிக்கப்பாேகிறது என்பது தெரியாது. அது போலத்தான், இந்த சீசனில் முதல் இரண்டு எபிசாேடுகளும் கொஞ்சம் சோர்வாக நகர்கிறது. ஆனால், நாயகன் அந்த விளையாட்டு போட்டிக்குள் நுழைந்த பின்பு கதை வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. ஆனால் அதுவும், முதல் சீசன் அளவிற்கு இல்லை. இப்படி நாம் ஏமாற்றமடைய காரணம், முந்தைய சீசன் ஏற்படுத்திய பெரும் எதிர்பார்ப்பாக இருக்கலாம்.
முதல் சீசன்-இரண்டாம் சீசன்-வித்தியாசம் என்ன?
ஸ்குவிட் கேம் தாெடரின் முதல் சீசனில் அடுத்து என்ன நிகழப்போகிறது என்பது ரசிகர்களால் கணிக்க முடியாதபடி இருந்தது. இப்படிப்பட்ட எதிர்பாராத திருப்பங்கள் ஒரு எபிசோடில் மட்டுமல்ல, எபிசாேடுக்கு எபிசோட் இருந்தது. ஆனால், இந்த சீசன் அப்படியில்லை. முதல் விளையாட்டு ‘ரெட் லைட்-க்ரீன் லைட்’ ஆகத்தான் இருக்கப்பாேகிறது என்பது தெரியும். ஆனால், அதற்கு அடுத்தடுத்த விளையாட்டுகள் ஹீரோவால் மட்டுமல்ல, தொடரை பார்ப்பவர்களாலும் கணிக்க முடியாததாக இருந்தது.
முதல் சீசனில் அந்த விளையாட்டையெல்லாம் நடத்தும் வயதானவர், ஒரு போட்டியாளராக இருப்பார். அதே போல இரண்டாவது சீசனிலும் அந்த விளையாட்டு போட்டியின் தலைவன், ஹீரோவுடனேயே பயணிக்கும் விளையாட்டு வீரனாக வருகிறான். இது ஒன்று, இந்த சீசன்களின் நல்ல திருப்புமுனைகளுள் ஒன்றாக இருந்தது.
மேலும் படிக்க | வதந்தி வெப் தொடர் எப்படி இருக்கு? விமர்சனம்!
வலுவான கதாப்பாத்திரங்கள்:
ஹீரோவான Seong Gi-hun கேரக்டரை தாண்டி, இந்த சீசனில் பல்வேறு கதாப்பாத்திரங்களை வலுவாக எழுதியிருக்கின்றனர். குறிப்பாக திருநங்கையாக வரும் ‘Hyun Ju’ பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார். இவரைப்போல, வில்லனாக வரும் யங்-ஹி (Young-il) பார்வையாலேயே மிரட்டுகிறார். ஹீரோவின் ஒன்றுமரியாத நண்பன் பாத்திரத்தில் பார்க் ஜங்க-பேவின் (Park Jung-bae) நடிப்பு அருமை.
உயிர்போகும் தருவாயிலும் காமெடி..
ஸ்குவிட் கேம் தொடரின் வெற்றிக்கு இன்னொரு முக்கியமான காரணம், அதில் இருக்கும் யதார்த்தமான காமெடி. நாளை உயிருடன் இருப்போமா இல்லையா என்று தெரியாத போதும், இவர்கள் அதை வைத்து ஜோக் செய்வது சிரிக்க வைக்கிறது. குறிப்பாக, பம்பரம் சுற்ற தவறி தான் சாகப்போகிறோம் என்று நினைத்து ஒரு பெண் கடவுளை வேண்ட ஆரம்பிக்க, அவரை கண்ணத்தில் அறைந்து “மொதல்ல இத முடி” என வரும் காட்சியில் ரகளை.
மொத்தத்தில்..
ஸ்குவிட் கேம் 1 போல பெரிய தாக்காத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் “அடுத்து என்ன நடக்கும்” என்ற தாகத்தை இந்த சீசன் ஏற்படுவதால் கண்டிப்பாக இந்த தொடரை நம்பி பார்க்கலாம்.
மேலும் படிக்க | வெற்றிமாறனின் விடுதலை 2 படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ