தன்னை விட 1 வயது இளைய நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா..!

Tirsha: நடிகை த்ரிஷா, தன்னை விட ஒரு வயது இளைய நடிகருக்கு அம்மாவாக நடிக்க உள்ளார். இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Aug 9, 2023, 12:13 PM IST
  • த்ரிஷா தற்போது தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.
  • அந்த படத்தில் அவர் 39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கிறார்.
  • த்ரிஷாவிற்கு 40 வயது ஆகிறது.
தன்னை விட 1 வயது இளைய நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் த்ரிஷா..!  title=

த்ரிஷா, தற்போது பல்வேறு மொழியில் இருக்கும் முன்னணி இயக்குநர்களால் தேடப்படும் நடிகையாக உள்ளார். இவர், சில நாட்களில் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். அதில், 39 வயது நடிகருக்கு தாயாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

த்ரிஷா:

தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும மேலாக நாயகி இடத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர், த்ரிஷா. துணை கதாப்பாத்திரங்கள் மூலம் தனது பயணத்தை ஆரம்பித்து ‘மெளனம் பேசியதே’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். இதையடுத்து எல்லாமே இவருக்கு ஏற்றம்தான். விஜய் நடிப்பில் தயாராகி வரும் ‘லியோ’ படத்திலும் இவர்தான் நாயகி. விஜய்யுடன் கில்லி, குருவி, ஆதி போன்ற படங்களில் நடித்திருந்த இவர், தற்போது பல வருடங்கள் கழித்து இந்த படம் மூலம் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த படம் உள்பட இன்னும் பல படங்களில் இவர் கமிட் ஆகி உள்ளார். 

மேலும் படிக்க | பிரபல இளம் நடிகையை திருமணம் செய்யும் விஷால்..! எப்போ கல்யாணம் தெரியுமா..?

அஜித்துடன் நடிக்கிறாரா..? 

நடிகை த்ரிஷாதான் அஜித்தின் ‘விடா முயற்சி’ படத்தில் நாயகி என பேசப்பட்டது. இந்த படத்தை பிரபல இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குகிறார். படப்பிடிப்பு இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. விடா முயற்சி படத்தில் த்ரிஷாதான் கதாநாயகி என அதிகாரப்பூர்வ தகவல் வருவதற்கு முன்னதாகவே அவருக்கு பதில் வேறு ஒரு நாயகி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகிவிட்டன. தமன்னாதான் அந்த நாயகி என்றும் கூறப்பட்டது. பின்னர், தமன்னாவும த்ரிஷாவும் சேர்ந்து நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது வரை, இப்படத்தில் யார் கதாநாயகி என்பது குழப்பமாகவே உள்ளது. இந்த நிலையில்தான், த்ரிஷா நடிக்கும் இன்னொரு படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

Trisha

1 வயது இளைய நடிகருக்கு அம்மாவாக…

நடிகை த்ரிஷா, பல நாட்களுக்கு தெலுங்கு படம் ஒன்றில் நடிக்கிறார். மீனா, கல்யாணி பிரியதர்ஷன், பிரித்விராஜ் சுகுமாறன், மோகன்லால் உள்ளிட்ட பலரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘ப்ரோ டேடி’. இந்த படம், தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இந்த படத்தில் ஹீரோவாக மெகா ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிரஞ்சீவி ஹீரோவாக வருகிறார். இதில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருப்பதாக பேசப்படுகிறது.  இதில், சிரஞ்சீவி-த்ரிஷா ஜோடியின் மகனாக பிரபல தெலுங்கு நடிகர் சர்வானந்த் வருகிறார். இவருக்கு வயது 39. இவருக்கு அம்மாவாக நடிக்க இருக்கும் த்ரிஷாவின் வயது 40. தன்னைவிட 1 வயது மட்டுமே இளையவருக்கு தாயாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

தோல்வியை அதிகம் சந்திக்காத நாயகி:

தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளிலேயே தோல்வியையே அதிகம் சந்திக்காத நடிகைகளுள் த்ரிஷாவும் ஒருவர். தமிழின் முன்னணி ஹீரோக்களான விஜய், அஜித், ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிடட் பலருக்கு ஜோடியாக சேர்ந்து நடித்து விட்டார். இவர் நடித்த பல படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளன. த்ரிஷா, சமீப காலங்களில் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் கதைகளிலும் நடித்து கொண்டு இருக்கிறார். இந்த படங்கள் பெரிதும் வெற்றி பெறுவதில்லை என்றாலும் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகின்றன. 

மேலும் படிக்க | ‘ஜெயிலர்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைப்பு..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ  

Trending News