தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகர் ரல்லப்பள்ளி வெங்கட நரசிம்ம ராவ் உடல்நலக்குறைவால் காலமானார்.
73-வயது ஆகும் இவர் தனது சிறு பிராயத்திலேயே நடிக்க தொடங்கிவிட்டார். மத்திய செய்தி மற்றும் தகவல் ஒளிப்பரப்புத் துறை அமைச்சகத்திலும் இவர் பணியாற்றியுள்ளார்.
தமிழில் பாம்பே, மின்சாரக்கனவு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கிட்டதட்ட 800-க்கும் மேற்பட்ட காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ஐந்து முறை ஆந்திர அரசின் மாநில விருந்து உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Rallapalli gaaru..one of my favourites.
RIP SIR— Nani (@NameisNani) May 17, 2019
ரசிகர்களால் ‘ரல்லப்பள்ளி’ என செல்லமாக அழைக்கப்படும் இவர் பங்குபெற்ற பாபாய் ஹோட்டல் என்னும் டிவி நிகழ்ச்சிக்கு குவிந்த ரசிகர்கள் ஏராலம்.
Sad to know about Rallapalli Gaaru ... had an honour of working with him in DJ .... What a gem of an actor and a great human being .... We miss you GuruGaaru.....
— Harish Shankar .S (@harish2you) May 17, 2019
வயோதிக மூப்பின் காரணமாக ஹைதராபாத் மேக்ஸ் க்யூர் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலக பிரபலங்கள் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.